பெங்களூர் தொழிலதிபர் மீது ரூ.65 கோடி மோசடி புகார்!
சென்னை: வீடு கட்டி தருவதாகக் கூறி ரூ.65 கோடியை சுருட்டிய பெங்களூர் தொழிலதிபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பெங்களூரை சேர்ந்தவர் மனோஜ் நம்பூரு. அலையன்ஸ் புராஜக்ட் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை சென்னை பாடியில் நடத்தி வருகிறார்.
19 மாடியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி விற்கப்போவதாக சில மாதங்களுக்கு முன் விளம்பரப்படுத்தியிருந்தார். இதில் வீடு கேட்டு சென்னையில் வசிக்கும் 300க்கும் மேற்பட்டோர் லட்சக்கணக்கில் பணத்தை முன் பணமாகக் கொடுத்தனர்.
ஆனால் கட்டுமான பணி தொடங்குவதற்கான அறிகுறியே தெரியவில்லை. இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் கூட்டத்தை மனோஜ் நம்பூரு சென்னை சவேரா ஓட்டலில் நேற்று இரவு நடத்தினார். சி.எம்.டி.ஏ. ஒப்புதல் கொடுக்காததால் வீடுகட்ட முடியவில்லை என்று மனோஜ் நம்பூரு விளக்கம் அளித்தார்.
இதை ஏற்காத மக்கள் ஆவேச வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அவரை சுற்றி வளைத்தனர். இதனால் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ராயப்பேட்டை உதவி கமிஷனர் வசந்த குமாரி தலைமையில் போலீசார் விரைந்துவந்தனர். வாடிக்கையாளர்களின் பிடியில் சிக்கிய தொழில் அதிபர் மனோஜ் நம்பூருவை போலீசார் மீட்டு ராயப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அவரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து பாதிக்கப்பட்ட சுமார் 100 பேர் எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர். இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்று போலீஸ் தரப்பில் உறுதி கொடுத்தனர்.
ரூ.65 கோடி மோசடி செய்துவிட்டதாகவும், மனோஜ் நம்பூரு மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரித்து வருகிறார்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications