எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் நாளை தொடக்கம்: 8.5 லட்சம் பேர் எழுதுகின்றனர்
சென்னை: எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகள் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகின்றன. இந்தத் தேர்வை 8.5 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதவுள்ளனர்.
பிளஸ்-2 தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கி இன்றுடன் முடிவடைந்தன.
இந் நிலையில், எஸ்.எஸ்.எல்.சி, மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ-இந்தியன், ஓரியண்டல் 10ம் வகுப்பு தேர்வுகள் நாளை தொடங்குகின்றன.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 2,791 தேர்வு மையங்களில் 6,493 பள்ளிகளை சேர்ந்த 8,56,956 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். இதில் 4,22,523 பேர் மாணவர்கள். 4,34,443 பேர் மாணவிகள்.
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தனித் தேர்வர்களும் இந்தத் தேர்வை எழுதவுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 14,618 பேர் கூடுதலாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதுகி்ன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல மெட்ரிகுலேஷன் 10ம் வகுப்பு தேர்வை 1,476 மையங்களில் 3,138 பள்ளிகளைச் சேர்ந்த 1,30,020 பேர் எழுதுகின்றனர். இவர்களில் 71,714 பேர் மாணவர்கள். 58,256 பேர் மாணவிகள்.
ஆங்கிலோ-இந்தியன் தேர்வை 4,492 பேரும், ஓ.எஸ்.எல்.சி. தேர்வை 1,593 பேரும் எழுதுகின்றனர்.
எஸ்.எஸ்.எல்.சி, ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகள் ஏப்ரல் 7ம் தேதி முடிவடைகின்றன. மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ-இந்தியன் தேர்வுகள் ஏப்ரல் 9ம் தேதியும் முடிவடைகின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications