சொத்துக்கு ஆசைப்பட்டு குழந்தைக்கு விஷம் கொடுத்த சித்தி கைது!
திருவள்ளூர்: சொத்துக்கு ஆசைப்பட்டு பச்சிளம் குழந்தையை பூச்சி மருந்து கொடுத்து கொல்ல முயன்ற சித்தி கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அருகே உள்ள கோவிலாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாபு (40). இவரது மனைவி கிரிஜா (38). திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை.
பாபுவின் தம்பி பெயர் ஜெயராமன். இவர் மனைவி ரேகா மற்றும் 10 வயது மகன் ஆகியோருடன் அண்ணன் பாபு வீட்டிலேயே கூட்டு குடும்பமாக வசிக்கிறார்கள்.
பாபுவிற்கு குழந்தை இல்லாததால், அவரின் சொத்து முழுக்க தம்பி ஜெயராமனின் மகனுக்கே சேரும் என அவர்களுக்குள்ளாக தீர்மானித்து வைத்திருந்தனர்.
இந்நிலையில் பாபுவின் மனைவி கிரிஜாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் குழந்தை பராமரிக்கப்பட்டு வந்தது.
நேற்று திடீரென குழந்தையின் வாயில் நுரை தள்ளியது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
விசாரித்து பார்த்ததில் பாபுவின் தம்பி மனைவி ரேகா, குழந்தையை கொஞ்சுவது போல நடித்து வாயில் பூச்சிக் கொல்லி மருந்தை திணித்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நர்ஸ் மார்க்கரேட் ஸ்டெல்லா எழும்பூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து ரேகா கைதுசெய்யப்பட்டார்.
ரேகா தான செய்த தவறை போலீசிடம் ஒப்புக் கொண்டார். போலீசிடம் வாக்குமூலம் அளிக்கையில், 'கிரிஜாவுக்கு குழந்தை இல்லாததால் சொத்து முழுவதும் எனது மகனுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தேன்.
இந்த நிலையில் கிரிஜா குழந்தை பெற்றது எனக்கு பிடிக்கவில்லை. குழந்தையை எப்படியாவது கொன்றுவிட முடிவு செய்தேன். குழந்தையை பார்க்க வரும்போது கையோடு பூச்சி மருந்தையும் எடுத்துவந்தேன்.
குழந்தையை கொஞ்சுவது போல நடித்து அதன் வாயில் விஷத்தை ஊற்றிவிட்டேன். முதலில் அதை யாரும் பார்க்கவில்லை. குழந்தை மயக்கமானதால் நான் மாட்டிக்கொண்டேன்' என்று தெரிவித்துள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications