யாருக்கும் ஓட்டுப் போட வேண்டாம் என்று பிரசாரம் செய்யலாம்- உயர்நீதிமன்றம்
சென்னை: யாருக்கும் ஓட்டுப் போடாதீர்கள் என்று கூறி பென்னாகரத்தில் பிரசாரம் செய்ய விவசாயிகள் விடுதலை முன்னணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்தப் பிரசாரத்திற்கு போலீஸார் பாதுகாப்பு அளிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக விவசாயிகள் விடுதலை முன்னணியின் பென்னாகரம் தாலுகா குழு உறுப்பினர் கோபிநாத் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில்,
பென்னாகரம் தொகுதிக்காக கடந்த 15 ஆண்டுகளாக எங்கள் அமைப்பு பாடுபட்டு வருகிறது. தற்போது புதிய பொருளாதார கொள்கைகளாலும், உலக வர்த்தக அமைப்பின் பொருளாதார கொள்கைகளாலும் இந்தியாவில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக ஏறியுள்ளது. இந்த கொள்கைக்கு இங்குள்ள அரசியல் கட்சிகள் கைகோர்த்து ஆதரவு தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், பென்னாகரம் தொகுதிக்கு வருகிற 27-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது.
எனவே, இந்த நேரத்தில் இந்த பொருளாதார கொள்கை பற்றியும், மக்களின் நிலை பற்றியும் பொதுமக்களிடம் பேசுவதற்காக 7.3.2010 அன்று பொதுக்கூட்டம் நடத்துவதற்கு முடிவு செய்தோம். அந்த கூட்டத்தில், இந்த தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் மக்கள் ஓட்டு போடக் கூடாது என்று பிரசாரம் செய்வதற்கு முடிவு செய்தோம்.
எனவே இதற்காக பென்னாகரம் பஸ் நிலையம் அருகே மார்ச் 7-ந் தேதி மாலை 5 மணிக்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பென்னாகரம் போலீஸ் துணை சூப்பிரண்டிடம் அனுமதி கேட்டு 26.2.2010 அன்று விண்ணப்பித்தேன்.
நான் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்ட இடம் தடை செய்யப்பட்ட பகுதி அல்ல. அங்கு கூட்டம் நடத்தப்படுவதால் பொதுமக்களின் அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால், நாங்கள் அனுமதி கேட்ட இடம் தடை செய்யப்பட்ட பகுதி என்றும், இதுபோன்ற விண்ணப்பங்களை தேர்தல் நேரம் என்பதால் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மட்டுமே தாக்கல் செய்யவேண்டும் என்று கூறி எனது விண்ணப்பத்தை போலீஸ் துணை சூப்பிரண்டு நிராகரித்து விட்டார்.
மேலும், இந்த பொதுக்கூட்டம் நடத்தப்பட்டால் அது பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் என்று தெரிவித்திருந்தார். எனவே, நான் தர்மபுரி மாவட்ட கலெக்டரிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்தேன். அவர் அந்த விண்ணப்பத்தை மாவட்ட வருவாய் அதிகாரிக்கு அனுப்பி வைத்தார். ஆனால், போலீஸ் துணை சூப்பிரண்டு கூறிய அதே காரணத்தை கூறி எனது விண்ணப்பத்தை மாவட்ட வருவாய் அதிகாரி நிராகரித்துவிட்டார்.
பொதுக்கூட்டம் நடத்தும் தேதியை மாற்றி வேறு தேதியில் நடத்துவதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். வாக்குசாவடியில் யாருக்கும் ஓட்டு போடமாட்டோம் என்று பதிவு செய்வதற்கு உரிமை அளிக்கப்பட்டுள்ள நிலையில், யாருக்கும் ஓட்டு போடவேண்டாம் என்று பிரசாரம் செய்வதற்கு அனுமதி மறுப்பது நியாயமல்ல.
எனவே, மார்ச் 20-ந் தேதிக்குள் எங்களுக்கு பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி கே.என்.பாட்ஷா, மனுதாரருக்கு அந்த பகுதியில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அவர் 23-ந் தேதி மாலை 6 மணியில் இருந்து இரவு 9 மணிக்குள் பொதுக்கூட்டத்தை நடத்தி முடிக்க வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பொதுக்கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
கலை நிகழ்ச்சிகளில் ஆபாசமோ, வேறு எந்தவொரு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்பாடோ இருக்கக்கூடாது. இதற்கு போலீசார் தகுந்த ஏற்பாடுகளை செய்யவேண்டும். அந்த ஏற்பாடுகளை போலீஸ் சூப்பிரண்டு கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications