மே மாதம் அமைச்சரவையில் மாற்றம் செய்ய பிரதமர் திட்டம்?

தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி மத்தியில் அமைச்சரவையில் 72 பேர் அமைச்சர்களாக இருக்க முடியும். தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சர்வையில் தற்போது 69 பேர் மட்டுமே உள்ளனர். எனவே மேலும் 3 பேரை சேர்க்க முடியும்.
மன்மோகன் சிங் தலைமையிலான 2வது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவியேற்று மே 22ம் தேதியுடன் ஒரு வருடம் முடியப் போகிறது. இதையடுத்து அமைச்சரவையை மாற்றியமைக்க பிரதமர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
கடந்த ஒரு ஆண்டு காலத்தில் அமைச்சர்களின் செயல்பாடுகளை பிரதமர் ஆய்வு செய்து வருகிறார். அதன் அடிப்படையி்ல் மாற்றம் இருக்கும் எனத் தெரிகிறது.
சிலரது செயல்பாடுகள் பிரதமருக்கு கட்டோடு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம். எனவே அவர்களை நீக்குவது அல்லது இலாகாக்களை பறிப்பது போன்றவற்றில் அவர் ஈடுபடக் கூடும். சிலர் கூடுதல் இலாகாக்களை வைத்துக் கொண்டு அவதிப்படுகிறார்கள். அவர்களின் பணி இலகுவாக்கப்படலாம். புதியவர்கள் அமைச்சரவையில் சேரும் வாய்ப்பும் உள்ளது.
மாற்றப் பட்டியலில் காங்கிரஸ் மட்டுமல்லாமல் தோழமைக் கட்சிகளின் அமைச்சர்களும் இடம் பெறுவார்கள் எனத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications