ஒகனேக்கல் திட்டம் நிறைவேற்றப்படுவதை நேரில் வந்து பார்க்க ஜெ. தயாரா - மு.க.ஸ்டாலின்
பென்னாகரம்: ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்படவில்லை, தொடங்கவில்லை என்று கூறும் ஜெயலலிதா அந்தப் பணிகளை நேரில் வந்து பார்க்கத் தயாரா என்று சவால் விட்டுள்ளார் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தி.மு.க. வேட்பாளர் இன்பசேகரனை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக மு.க.ஸ்டாலின் நேற்று கார் மூலம் கிருஷ்ணகிரி வந்தார். பின்னர் மாலையில், சேசம்பட்டி கிராமத்தில் அவர் பேசுகையில்,
தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார். அதன்படி, அந்த திட்டத்திற்கு தேவையான நிதி உதவியை பெறுவதற்காக நான் ஜப்பான் சென்றிருந்தேன். அங்குள்ள வங்கி அதிகாரிகளிடம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினையை எடுத்துக்கூறினேன்.
அப்போது நமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு ஜப்பான் நாட்டு வங்கி அதிகாரிகள் தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு வந்து பார்வையிட்டனர். இதையடுத்து நிதிஉதவி அளிக்கவும் ஒப்புக்கொண்டனர். தொடக்கத்தில் இந்த திட்டத்திற்கு ரூ.1,339 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதன்பிறகு திருத்திய மதிப்பீடாக ரூ.1938 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தர்மபுரியில் நடந்த விழாவில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார். அப்போது இருந்து பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. மடம் என்ற கிராமத்தில் இந்த திட்டத்திற்காக பிரமாண்டமான சமநிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டப்பட்டு வருகிறது. அங்கு நடைபெறும் பணிகளை நானே தொடங்கி வைத்தேன்.
இந்த நிலையில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் தொடங்கப்படவில்லை என்று ஜெயலலிதா அம்மையார் பொய் பிரசாரம் செய்து வருகிறார். மடம் என்ற கிராமத்தில் நடக்கும் பணிகளை அவர் வந்து நேரில் பார்க்க தயாரா? அதற்கான நாள், நேரத்தை அவரே குறிக்கட்டும். நானும் வருகிறேன். அதைவிடுத்து தேர்தலுக்காக, அரசியலுக்காக தவறான செய்தியை சொல்லி உங்கள் தராதரத்தை மேலும் குறைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கடந்த தேர்தலின்போது என்னென்ன உறுதிமொழிகள், வாக்குறுதிகளை முதல்வர் கருணாநிதி கொடுத்தாரோ அவை அனைத்தையும் நிறைவேற்றி விட்டார். சொல்லாத திட்டங்களையும் அவர் இப்போது நிறைவேற்றி வருகிறார்.
தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கினார். இப்போது ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கி வருகிறார். 1989-ம் ஆண்டு ஏழை பெண்களின் திருமணத்திற்காக உதவித்தொகை ரூ.5 ஆயிரம் வழங்கினார். ஜெயலலிதா ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இந்த திருமண உதவித்திட்டம் நிறுத்தப்பட்டது. முதல்வர் கருணாநிதி ஆட்சிக்கு வரும்பொதெல்லாம் திருமண உதவித்திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்டதுடன் அதற்கான தொகையும் அதிகரித்து கொடுக்கப்பட்டது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட பட்ஜெட்டில் திருமண உதவித்தொகை இனிமேல் ரூ.25 ஆயிரமாக வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. சத்துணவில் 2 முட்டைகள் வழங்கப்படும் என்று அறிவித்தார். இப்போது 3 முட்டை வழங்கி வருகிறார்.
உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டு திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. யாருக்கு எந்த நோய் வேண்டுமானாலும் வரலாம். பணக்காரர்களுக்கு மட்டுமே உயர் சிகிச்சை பெறும் நிலை இருந்தது. இந்த காப்பீட்டு திட்டம் அறிமுகம் செய்தபிறகு ஏழை, எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளில் மட்டுமல்லாமல் தனியார் மருத்துவமனைகளிலும் இதய அறுவை சிகிச்சை போன்ற உயர் சிகிச்சைகளை பெற்று வருகின்றனர்.
தேர்தலின்போது அறிவிக்காத கலைஞர் வீட்டு வசதி திட்டம் என்ற உன்னதமான திட்டத்தை முதல்வர் கருணாநிதி சமீபத்தில் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி தமிழ்நாட்டில் உள்ள 21 லட்சம் குடிசை வீடுகள் இலவச கான்கிரீட் வீடுகளாக மாற்றித்தரப்பட உள்ளன. 6 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் ஒரு குடிசை வீடுகூட இருக்காது. இந்த திட்டத்தின்படி முதல் கட்டமாக 3 லட்சம் இலவச கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு ரூ.1,800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு ஏழைஎளிய மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி வரும் தி.மு.க. ஆட்சிக்கு வலு சேர்க்கவும், முதல்வர் கருணாநிதியின் கரத்தை வலுப்படுத்தவும் இந்த இடைத்தேர்தலில் இன்பசேகரனுக்கு உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டளித்து அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்றார் ஸ்டாலின்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications