தென்காசியில் வடநாட்டு துப்பாக்கிகளோடு 8 பேர் கைது
தென்காசி: நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், வடமாநிலங்களில் இருந்து கள்ள துப்பாக்கிகளை வாங்கி வந்து விற்பனை செய்த எட்டு பேர் அடங்கிய கும்பலை போலீஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.
இந்தக் கும்பல் குறித்து எஸ்.பி. ஆஸ்ரா கார்கிற்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து தனிப்படை அமைத்து பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு நடைபெற்று வந்தது. நேற்று மதுரை ரோட்டில் குத்துகல்வலசை அருகே வேகமாக வந்த காரை மடக்கி சோதனை போட்டனர்.
அந்த காருக்குள் இருந்த தலையணைக்குள் 2 கைத் துப்பாக்கிகள் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக தலைவன் கோட்டைப் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர், செல்வகுமார், அரசு போக்குவரத்து கழக நடத்துனர் பூசைப்பாண்டியன், முத்து, மகேஷ், மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்தோஷ்ராஜ், துரைப்பாண்டியன், ஜெயக்கொடி ஆகிய 8 பேர் சிக்கினர்.
அவர்களிடம் விசாரித்ததில், மத்திய பிரதேசத்தில் இருந்து கள்ள துப்பாக்கிகளை வாங்கி வந்து நெல்லை மாவட்டத்தில் விற்பனை செய்ய கடந்த 15ம் தேதி வாங்கி வந்தது தெரிய வந்தது. அவர்களிடம் மாவட்ட எஸ்பி ஆஸ்ரா கார்க் நேரடி விசாரணை நடத்தி வருகிறார்.
பிடிபட்ட துப்பாக்கிகளின் மதிப்பு ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications