Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பென்னாகரத்தில் திமுகவே வெல்லும்: வாக்குகள் விலைக்கு வாங்கப்படுகின்றன: லயோலா கல்லூரி சர்வே

Subscribe to Oneindia Tamil

Karunanidhi-Ramadoss-Jayalalitha-Vijayakanth
சென்னை: பென்னாகரத்தில் திமுகவே வெல்லும் என்றும் அங்கு வாக்குகள் விலைக்கு வாங்கப்படுவதாக வாக்காளர்களில் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளதாகவும் லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

பென்னாகரம் இடைத் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்பை லயோலா கல்லூரியின் ஊடக காட்சியியல் பிரிவு மேற்கொண்டு அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. முடிவுகளை துறைத் தலைவர் பேராசிரியர் ராஜநாயகம் வெளியிட்டார். ஜனவரி மற்றும் மார்ச் மாதம் என இரண்டு கட்டமாக சர்வே எடுக்கப்பட்டது. அதன் விவரம்:

கடந்த ஜனவரி மாதம் 29ம் தேதி முதல் 31ம் தேதி முடிய முதல்கட்டமாகவும், மார்ச் மாதம் 19ம் தேதி முதல் 21ம் தேதி முடிய இரண்டாம் கட்டமாகவும் இந்த ஆய்வு நடைபெற்றது. முதல் கட்ட ஆய்வு 45 இடங்களில் 500 பேரிடமும், இரண்டாம் கட்ட ஆய்வு 100 இடங்களில் 1225 பேரிடமும் கருத்துக்கள் சேகரிக்கப்பட்டன. மாணவர்கள், உதவியாளர்கள், களப்பணியாளர்கள் என 20 பேர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.

புதிய வாக்காளர்கள் முதல் முதிய வாக்காளர்கள் வரை படித்தவர்கள், கூலித்தொழிலாளர்கள், வன்னியர்கள், பிற சமூகத்தினர் என அனைத்து தரப்பு மக்களையும் இந்த குழு சந்தித்து கருத்து கேட்டது.

உயர்ந்து வரும் திமுக செல்வாக்கு:

இந்த ஆய்வில் திமுகவின் செல்வாக்கு உயர்ந்து வருவது தெரிய வந்துள்ளது.

கடந்த ஜனவரி மாத ஆய்வில் 40.1 சதவீதமாக இருந்த திமுகவின் செல்வாக்கு தற்போது 44.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. மாறாக பாமகவின் செல்வாக்கு 31.8 சதவீதத்திலிருந்து 23.3 சதவீதமாக குறைந்துள்ளது.

அதிமுக செல்வாக்கும் உயர்ந்துள்ளது:

அதே போல அதிமுகவின் செல்வாக்கு 8 சதவீதத்திலிருந்து 15.5. சதவீதமாக 2 மடங்கு உயர்ந்துள்ளபோதிலும், அக்கட்சி இன்னும் மூன்றாம் இடத்திலேயே உள்ளது.

சரிந்த தேமுதிக:

தேமுதிகவின் ஆதரவு 6.1 சதவீதத்திலிருந்து 3.5 சதவீதமாக சரிந்துள்ளது. எந்த கட்சிக்கும் ஓட்டு போட மாட்டோம் என்பவர்களின் எண்ணிக்கை 2.5 சதவீதத்திலிருந்து 0.5 சதவீதமாக குறைந்துள்ளது.

ஜனவரி மாதத்தில் நடந்த ஆய்வுக்கும், மார்ச் மாத ஆய்வுக்குமிடையே மக்களின் மனப்போக்கில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதை காணமுடிகிறது.

எந்த வேட்பாளருக்கு வாக்களிப்பீர்கள்?:

எந்த வேட்பாளருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு திமுக வேட்பாளருக்கு என்று தெரிவித்தவர்கள் 44.9 சதவீதம் பேராவர்.

2வது இடம் பாமகவுக்கு-3வது இடம் அதிமுகவுக்கு:

இதில் 2வது இடம் பாமகவுக்குக் கிடைத்துள்ளது. அக்கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக 23.3% பேரும், அதிமுகவுக்கு ஆதரவாக 15.5% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தேமுதிகவுக்குக் கிடைத்துள்ள ஆதரவு 3.5% ஆகும். 10.1 சதவீதம் பேர் இன்னும் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இன்னும் முடிவு செய்யவில்லை என்று 10.1 சதவீத பேரும் தெரிவித்துள்ளனர்.

விலைக்கு வாங்கப்படும் ஓட்டுக்கள்:

பணம் கொடுத்து ஓட்டுக்களை விலைக்கு வாங்குவதாக பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர். அதாவது 63% பேர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளனர்.

கள்ள ஓட்டு போடப்படுவதாக 26.3% பேரும், ஓட்டுப் போடுமாறு கூறி தாங்கள் மிரட்டப்படுவதாக 5.6% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஓட்டுப் போடுவதைத் தடுப்பதாக 3.4 சதவீத பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பணத்துக்கு ஓட்டுப் போடுவது தவறு:

பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப் போடுவது தவறு இல்லை என்று 47.4 சதவீத பேர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் தவறு என்று 49.6 பேர் தெரிவித்துள்ளனர்.

தொகுதியின் முக்கிய பிரச்சனையாக குடிநீர் வசதிதான் கூறப்பட்டுள்ளது. அதாவது 80.6 சதவீதம் பேர் குடிநீர் வசதி இல்லை என்று கூறியுள்ளனர்.

குடிநீர் தான் பெரிய பிரச்சனை:

குடிநீர்ப் பிரச்சனைதான் பென்னாகரம் தொகுதியின் மிக மிக முக்கியப் பிரச்சனையாக இதன் மூலம் தெரிய வருகிறது.

வேலை இல்லா திண்டாட்டம் தான் முக்கிய பிரச்சனை என்று 8.2% பேரும், கழிப்பிட, துப்புறவு வசதி இல்லை என்று 5.4% பேரும், சாலை வசதி இல்லை என்று 3.6% பேரும், தொழில் வளர்ச்சி இல்லை என 2.2 சதவீத பேரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

திமுகவால்தான் பென்னாகரம் தொகுதி பிரச்சனைகளைத் தீர்க்க முடியும் என 34.5 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். பாமகவுக்கு ஆதரவாக 21.9 சதவீதம் பேரும், அதிமுகவால் பிரச்சனைகளைத் தீர்க்க முடியும் என்று 10.6 சதவீதம் பேரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். தேமுதிவுக்கு கிடைத்துள்ள ஆதரவு 2 சதவீதம் மட்டுமே.

இதை விட முக்கியமாக, யார் வந்தாலும் எங்களது பிரச்சனை தீராது என்று கிட்டத்தட்ட 31 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இடைத் தேர்தலை ஆதரித்து 42.6 சதவீதம் பேரும், 40.4 சதவீதம் பேர் எதிர்த்தும் கருத்து தெரிவித்துள்ளனர்.

கரைபுரண்டோடும் மது:

தொகுதியில் மதுவெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சிறுவர்கள் அதிக அளவில் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டை வாக்காளர்கள் முன் வைத்துள்ளனர்.

தேர்தல் கமிஷனின் செயல்பாடு நன்றாக உள்ளது என்று திமுக ஆதரவாளர்கள் 62.2% பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதிமுகவினர் 40.5%, பாமக 34.7%, தேமுதிக 20% பேர் தேர்தல் கமிஷனின் செயல்பாட்டை பாராட்டியுள்ளனர்.

அதன் செயல்பாடு மோசம் என்று பாமகவை சேர்ந்த 30.5% பேர் கூறுகின்றனர். அதிமுகவில் 16.2% பேரும், தேமுதிகவில் 20% பேரும், திமுகவில் 4.5% பேரும் இந்த கருத்தை தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+