கேட்கும் முன்பே கொடுக்கும் கடவுள் கருணாநிதி-ஜெகத் ஜால்ரா
சென்னை: வன்னிய சமுதாயத்தினர் கேட்கும் முன்பே அள்ளிக் கொடுக்கும் கடவுளாக திகழ்கிறார் முதல்வர் கருணாநிதி என்று மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
பென்னாகரத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஜெகத்ரட்சகன் பேசுகையில்,
கேட்பாரற்றுக் கிடந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வன்னியர் சமூகம், அந்த சமூகத்தைப் பயன்படுத்தி தன் வீட்டுத் தோட்டத்தைக் கோபுரமாக்கி கொண்டவர்கள் தன் குடும்பம், தன் பிள்ளை என்று மட்டுமே வாழ்ந்தார்களே தவிர அந்த சமூகத்துக்கு எள் முனை அளவுகூட யாரும் இதுவரை செய்யவே இல்லை.
கேட்பாரற்றுக்கிடந்த சமூகம் தொடக்க காலம் தொட்டு இன்றுவரையில் அதையும் தனது சமூகமாக கருதி அந்த மக்களுக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி ஆற்றிய சேவையின் சுவடுகளை நினைத்துப்பார்க்கிறேன். கண்களில் நீர் மல்குகிறது.
இதோ-1969 பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப்பிறகு, முதல்-அமைச்சராக பொறுப்பேற்கிறார் இன்றைய நம் முதல்வர் கருணாநிதி. தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளராக இருக்கும் சி.ஏ.ராமகிருஷ்ணன் ஐ.சி.எஸ். ஓய்வுபெறுகிறார். அவருடைய இடத்தில் அவர்களில் ஒருவரைத்தான் நியமித்திட வேண்டும்.
ஆனால், அவர்களை விட்டுவிட்டு, ஒரு ஐ.ஏ.எஸ்.அதிகாரியை நமது சமுதாயத்தில் பிறந்த இ.பி.ராயப்பாவை நியமனம் செய்கிறார் நம் முதல்-அமைச்சர் கருணாநிதி.
அடுத்ததாக முதல்-அமைச்சரின் நேர்முக உதவியாளராக ஒரு ஐ.ஏ.எஸ்.அதிகாரி தான் நியமனம் செய்யப்பட வேண்டும். ஆனால், தன் மனம் கவர்ந்த ஒரு வன்னிய இளைஞர் வைத்தியலிங்கத்தை தனது நேர்முக உதவியாளராக்கிக் கொள்கிறார். அவர் ஐ.ஏ.எஸ். இல்லையே என சிலர் சொல்கிறார்கள். அவரை ஐ.ஏ.எஸ். அதிகாரியாக்கி உத்தரவிடுகிறார் கருணாநிதி.
முதன் முதலாக நம் இனத்தைச்சேர்ந்த அம்பா சங்கர் தலைமையில் ஒரு கமிஷன் அமைத்தார். மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இடஒதுக்கீட்டு போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை ஈந்த தியாகிகளின் தியாகத்தை மதிக்கும் வகையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு தந்து அழகு பார்த்தது நம் முதல்-அமைச்சர் கருணாநிதி அல்லவா!
விடுதலைப்போராட்ட வீரர்களுக்கு இணையாக இடஒதுக்கீடு போராளிகளையும் மதித்து அவர்களுக்கு மாதந்தோறும் தலா 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கிடைக்கச்செய்தவர் கருணாநிதிதானே!
இப்போராட்டத்தில் இன்னுயிர் நீத்த தியாக மறவர்கள் 27 பேரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் இழப்பீடு உதவிபுரிந்தார்.
மத்திய அரசில் முதன்முதலாக கேபினட் அந்தஸ்தில் ஜி.வெங்கடராமன் என்பவரை மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சராக்கி அழகு பார்த்தவர். அதுமட்டுமல்ல, டெல்லி சாணக்கியபுரியிலே இந்திய பிரதமரோடு அமர்ந்து மிக முக்கியமான சுகாதாரத்துறை அமைச்சராக உலகப்பயணம் செய்து வந்தாரே டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவரை மாநிலங்களவை உறுப்பினராவதற்கு முன்பாகவே அமைச்சராக்கி அதன்பிறகு மாநிலங்களவை உறுப்பினராக்கி அழகு பார்த்தவர் கருணாநிதி அல்லவா! அதுமட்டுமல்ல, வேலு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி. அவருக்கு ரெயில்வே இணை அமைச்சராகும் வாய்ப்பையும் வழங்கியவர் தலைவர் கருணாநிதிதானே.
இதுமட்டுமா? ஒரு குக்கிராமத்தில் கடிகாரத்தையும் பஸ்சையும் கூடப்பார்க்காமல் ஒரு ஏழை விவசாயியின் மகனாகப்பிறந்த என்னை மத்திய அமைச்சராக்கி அதுவும் தகவல் ஒலிபரப்புத்துறையை எனக்குதந்து தனது கோடானுகோடி தம்பிகளில் என்னையும் ஒரு தம்பியாக ஏற்று இன்று, எனக்கு தாயாக, தந்தையாக, அண்ணனாக, நான் வணங்குகிற கடவுளாக தலைவர் கருணாநிதி திகழ்கிறார்.
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக டாக்டர் விஸ்வநாதன், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக டாக்டர் பொற்கோ, பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தராக டாக்டர் தங்கராஜ், கோவை விவசாய பல்கலைக்கழக துணைவேந்தராக டாக்டர் பி.முருகேசபூபதி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்ராக டாக்டர் சபாபதி மோகன் ஆகிய ஐந்து வன்னியர்களை நியமித்து அழகு பார்த்ததும் நமது முதல்-அமைச்சர் கருணாநிதிதான். இன்னும் பட்டியல் நீண்டு கொண்டு இருக்கிறது.
தமிழகத்தின் தேர்வாணையக்குழு தலைவராக ஒரு வன்னியரை காசிவிஸ்வநாதன் ஐ.ஏ.எஸ்சை நியமித்ததும் கருணாநிதிதானே! மனித உரிமைக்குழு உறுப்பினராக்கி அதன்பிறகு தலைவராக மாரியப்பனை நியமித்து சிறப்பளித்ததும் கருணாநிதிதானே!
ஐந்தாவது முறையாக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதும், நமக்காக மூன்று வன்னியர்களை அமைச்சர்களாக்கி அவர்களிடம் பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை, விவசாயத்துறை மற்றும் சட்டத்துறை என முக்கியமான பொறுப்புகளை வழங்கி சிறப்பித்ததும் கருணாநிதிதான்.
வன்னிய சமுதாய மக்களுக்காக பல்வேறு அறக்கட்டளையின் சொத்துக்கள், வன்னிய மக்களுக்கே அவை முழுவதும் பயன் அளிக்கும் வகையில் 14-3-2001-ல் சந்திரசேகர் ஐ.ஏ.எஸ். தலைவராகக்கொண்டு வன்னியர் பொதுச்சொத்துக்கள் நலவாரியம் அமைக்க ஆவண செய்து தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தினார்.
வன்னிய மக்களின் கோரிக்கையை பரிவுடன் பரிசீலித்து ஐ.ஏ.எஸ்.அதிகாரி சந்தானத்தை நியமித்து வன்னியர் நலவாரியம் அமைத்து உள்ளார்.
நெடுஞ்சாலைத்துறை செயலாளராக சந்தானம் ஐ.ஏ.எஸ்., இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக சம்பத் ஐ.ஏ.எஸ்.ஆகியோரை நியமித்ததும் கருணாநிதிதானே!
போலி முகங்களையும், பொய்முகங்களையும் போட்டு இதுவரையில் இந்த சமூகத்தை வைத்து வியாபாரம் செய்த வியாபாரிகளை வன்னிய சமூகத்தினர் அடையாளம் கண்டு கொண்டு விட்டார்கள். இனி வன்னியர்களை காப்பாற்றுகிற காக்கும் கடவுள் தலைவர் கருணாநிதி தான் என்பதை உணர்ந்து கொண்டுவிட்டார்கள்.
கேட்பதற்கு முன்னதாகவே செய்ய வேண்டியவற்றை தானே வன்னியர் சமுதாயத்தின் தலைவராக இருந்து செய்து வருகின்றவர் கருணாநிதி தான் என்றார் ஜெகத்ரட்சகன்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications