கொல்கத்தா தீ விபத்தில் பலி 27 ஆக உயர்ந்தது
கொல்கத்தா: கொல்கத்தாவில் 150 ஆண்டுகள் பழமையான அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஏராளமானோர் பலத்த காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் நகரின் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது கவலைக்கிடமாக உள்ளனர்.
கொல்கத்தாவின் பிரபலமான பூங்கா வீதியில் அமைந்துள்ளது ஸ்டீபன் கோர்ட் என்ற அடுக்குமாடி கட்டடம். 150 ஆண்டுகள் பழமைமிக்க இந்தக் கட்டடத்தில் பல்வேறு கடைகள், ஹோட்டல், அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
நேற்று பிற்பகல் 2 மணி அளவில் கட்டடத்தின் முதல் தளத்தில் லிப்ட் உள்ள பகுதியில் தீப் பிடித்தது. தீ மளமளவென மேல் தளங்களுக்குப் பரவியது.
ஹோட்டல் மற்றும் கடைகளில் இருந்த வாடிக்கையாளர்கள் தீ பரவுவதை பார்த்து அலறியடித்துக் கொண்டு அங்குமிங்குமாக சிதறி ஓடி தப்ப முயன்றனர்.
மேல்நோக்கி தீ பரவியதால் அவர்களால் கீழே வர முடியவில்லை. இதனால் மேல் தளங்களுக்கு ஓடினர். இப்படி ஓடுகையில் பலர் மிதிபட்டு காயமடைந்தனர். சிலர் தீக்கு பயந்து மாடியில் இருந்து குதித்து படுகாயமடைந்தனர்.
சுமார் 300 தீயணைப்பு வீரர்கள் 15 தீயணைப்பு வண்டிகளுடன் தீயை அணைக்க முயன்றனர். உயரமான ஏணிகளை நிறுத்தி 5 மற்றும் 6வது தளத்தில் சிக்கியிருந்தவர்களை ஜன்னல்கள் வழியாக மீட்டனர்.
ஸ்டீபன் கோர்ட் கட்டடத்தின் உள்பகுதி முழுவதும் மரத்தால் ஆனது. இதனால் தீ வேகமாகப் பரவிவிட்டது.
இந்த விபத்தில் அந்தக் கட்டடத்தில் இருந்த கடைகள், அலுவலகங்கள் மற்றும் ஹோட்டல் எரிந்து சாம்பலாகிவிட்டன.
மாலை 7 மணிக்குத் தான் தீ அணைக்கப்பட்டது. பலத்த தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சிலர் மாடியிலிருந்து குதித்து காயமடைந்து உயிரிழந்தனர்.
6வது மாடியில் தீயில் கருகிய நிலையில் 4 பேரின் உடல்கள் நேற்று நள்ளிரவு மீட்கப்பட்டன.
இன்று காலையும் பல உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் சாவு எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications