திருமணமான 4 மாதத்தில் பெண் தற்கொலை
சென்னை: சென்னை அடையாறில் திருமணமான 4 மாதத்தில் பெண் தற்கொலை செய்து கொண்டார். தாலியை கழற்றி வைத்துவிட்டு தூக்கில் தொங்கிய அவர், கணவருக்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்துள்ளார்.
சென்னை அடையாறில் வசிப்பவர் சங்கரமோகன் (30). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வருகிறார்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடந்தது. இவருடைய மனைவி பெயர் வித்யா (26). வித்யாவும் பொறியியல் படித்துவிட்டு அடையாறு பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வந்தார்.
திருமணமான 4 மாதத்திலேயே கணவன்-மனைவி இருவரும் கருத்து வேறுபாட்டால் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டனர்.
விரக்தி அடைந்த வித்யா நேற்று முன்தினம் மாலையில் வீட்டின் உள்பக்கமாக கதவை பூட்டிக்கொண்டு ஊஞ்சல் கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இரவு வீடு திரும்பிய சந்திரமோகன் கதவு உள்பக்கம் பூட்டப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கதவை உடைத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டுக்குள் மனைவி வித்யா தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து மேலும் அதிர்ச்சியில் உறைந்துபோனார்.
உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் நேரில் வந்து விசாரித்தார்கள். வித்யாவின் பிணம் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வித்யா சாவதற்கு முன்பு தாலியை கழற்றி மேஜையில் வைத்துவிட்டு தனது கணவர், தந்தை மற்றும் கல்லூரி தோழன் ஆகியோருக்கு உருக்கமாக தனித்தனியாக 3 கடிதங்கள் எழுதி வைத்திருந்தார்.
கணவர் சந்திரமோகனுக்கு எழுதிய கடிதத்தில், 'நம்முடைய வாழ்க்கை 4 மாதத்தோடு முடிந்துபோகும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. நான் வேலை முடிந்து தாமதமாக வீட்டுக்கு வந்தபோதெல்லாம் நீங்கள் கோபப்பட்டு என்னை திட்டினீர்கள். சந்தேகமும் கொண்டீர்கள்.
இதனால் தான் நான் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறேன். நீங்கள் 2-வது திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழுங்கள். உங்கள் 2-வது திருமணத்துக்கு பரிசாக என்னுடைய தாலியை கழற்றி வைத்துவிட்டு செல்லுகிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வித்யாவின் கணவர் சந்திரமோகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications