தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா சீட்கள்- போட்டியிட தங்கபாலு, இளங்கோவன் மோதல்
சென்னை: தமிழகத்தில் ஆறு ராஜ்யசபா எம்.பிக்களின் பதவிக்காலம் வருகிற ஜூலை 4ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து அதில் போட்டியிட காங்கிரஸ் கட்சி கோஷ்டித் தலைவர்களிடையே கடும் போட்டி எழுந்துள்ளதாம்.
தமிழகத்தில் 6 பேர் உள்பட நாடு முழுவதும் 52 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 4ம் தேதியுடன் முடிவடைகிறது.
இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த ஆறு பேர் உள்பட 19 பேரின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடனும், மற்றவர்களின் பதவிக்காலம் ஜூலை 4ம் தேதியுடனும் முடிகிறது.
அனைத்து காலியிடங்களுக்கும் ஜூன் மாதம் தேர்தல் நடைபெறும் எனத் தெரிகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை 6 இடங்களில் திமுக கூட்டணிக்கு 4 இடங்கள் கிடைக்கும். மீதமுள்ள இரு இடங்களில் அதிமுக கூட்டணி வெல்ல முடியும்.
இதில் திமுக 3 இடங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடமும் ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது. இந்த ஒரு இடத்தைப் பிடிக்க காங்கிரஸ் கட்சியில் பெரிய அடிதடியே நடைபெறும் போலத் தெரிகிறது.
தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன், பிரபு, எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் என நான்கு கோஷ்டிகளைச் சேர்ந்தவர்கள் முட்டி மோத ஆரம்பித்துள்ளனராம்.
தங்கபாலு கடந்த லோக்சபா தேர்தலில் சேலத்தில் போட்டியிட்டுத் தோற்றார். இளங்கோவன் கோபிச்செட்டிப்பாளையத்தில் வீழ்த்தப்பட்டார். பிரபு கோவையில் தோல்வியுற்றார் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில், ராஜ்யசபா எம்.பி. ஆகி விட அவர்கள் துடிப்புடன் களம் இறங்கியுள்ளனர்.
இதேபோல மயிலாடுதுறை தொகுதியில் தோல்வியைத் தழுவிய மணிசங்கர அய்யர் சமீபத்தில் நாடாளுமன்ற நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications