போலி ஐபிஎஸ் அதிகாரி சாருலதாவுடன் தொடர்பு கொண்டிருந்த உதவி ஆணையர் சஸ்பென்ட்

எஸ்.பி. என்று கூறிக் கொண்டு சென்னை நகர காவல்துறையினரை மோசடி செய்தும், பலரிடம் போலீஸ் வேலை வாங்கித் தருவதாக கூறி லட்சக்கணக்கில் பண மோசடி செய்து வந்தவருமான சாருலதா என்ற இளம் பெண் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார்.
சிவகாசி ஜெயலட்சுமிக்கு அடுத்து காவல்துறையினரையே ஏமாற்றி மோசடி செய்த சாருலதாவின் கதை தமிழக காவல்துறை வட்டாரத்தை அதிர வைத்தது.
சாருலதாவுக்கு பல்வேறு காவல்துறை அதிகாரிகளுடன் தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. குறிப்பாக ஆயுதப்படை உதவி ஆணையர் பழனிச்சாமி நெருங்கிய தொடர்பு வைத்திருந்தது தெரிய வந்தது.
மேலும் தான் மோசடியாக சம்பாதித்த பணத்தில் ரூ. 10 லட்சத்தை பழனிச்சாமியிடம் கொடுத்ததாக சாருலதாவே வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து அவர் மீது இலாகா பூர்வ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், பழனிச்சாமி நேற்று இரவு சஸ்பென்ட் செய்யப்பட்டார்.
பழனிச்சாமி வீரப்பன் வேட்டையில் இடம் பெற்றிருந்தவர். இதன் காரணமாக சப் இன்ஸ்பெக்டராக இருந்த அவருக்கு இரட்டைப் பதவி உயர்வு கிடைத்து டி.எஸ்.பி. ஆனார். பின்னர் சென்னை ஆயுதப் படை போலீஸில் உதவி ஆணையராக கடந்த 3 வருடங்களாக அவர் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications