பேரூராட்சி அலுவலகத்தில் பத்திரிகை நிருபர் தாக்கப்பட்டார் - மதிமுக கவுன்சிலருக்கு வலை
சிதம்பரம்: செய்தி சேகரிக்க சென்ற தினமலர் நிருபர் மீது மதிமுக கவுன்சிலர் ரவி ஆபாசமாக திட்டி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில் அரசு திட்டங்களுக்காக சிமென்ட் மூட்டைகள் பயன்படுத்தப்படாமல் கிடந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இந்த நிலையில், பேரூராட்சியில் அலுவலகத்தில் நடைபெற்ற டெண்டர் குறித்த செய்தி சேகரிக்க தினமலர் நிருபர் செல்வராஜ் சென்றுள்ளார்.
அவரை கண்டதும் ஆவேசம் அடைந்த மதிமுக நகரச் செயலாளரும், 9 வது வார்டு பேரூராட்சி கவுன்சிலருமான ரவி (எ) ராஜகோபால், ஆபாச வார்த்தைகளால் திட்டியதோடு, கடுமையாக தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலை எதிர்பாரத செல்வராஜ் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றி அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு முதலுதவி அளித்தபின் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து செல்வராஜ், புவனகிரி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ஆனால் நிருபரை தாக்கிய மதிமுக கவுன்சிலர் ரவியை தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications