மீண்டும் வட்டி விகிதங்களை உயர்த்தும் ரிசர்வ் வங்கி!
மும்பை: மத்திய ரிசர்வ் வங்கி மீண்டும் பணக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்க உள்ளது.
சிஆர்ஆர் உள்ளிட்ட அனைத்து விகிதங்களிலும் மீண்டும் ஒரு மாறுதலைக் கொண்டுவரும் திட்டமுள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் கூறினார்.
"ஒரு சில வளர்ச்சிப் பணிகளை நாம் தியாகம் செய்ய வேண்டி வரலாம். ஆனால் உயரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இதுவே சரியான தருணம்..." என்று கூறியுள்ளார் சுப்பாராவ்.
உலகில் மற்ற நாடுகளை விட இந்தியா மிக விரைவில் மீட்சிப் பாதைக்கு வரக் காரணமே பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருந்ததே. எனவே மீண்டும் அதுபோன்றதொரு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அவசியம், என்கிறார் சுப்பாராவ்.
ரொக்க விகிதம், வங்கி வட்டி போன்ற அனைத்து பணவியல் கட்டுப்பாட்டு ஆயுதங்களையும் மீண்டும் பிரயோகிக்கவிருப்பதாக அவர் தெரிவித்தார்.
ரொக்க இருப்பு விகிதம், ரெபோ ரேட் போன்றவற்றில் ஏப்ரல் 20-ம் தேதிக்குள் 25 புள்ளிகள் அடிப்படையில் உயர்த்தப்பட்டது. மீண்டும் அடுத்த வாரம் இதே அளவு உயர்வு அறிவிக்கப்படும் என்கின்றனர் ரிசர்வ் வங்கி நிபுணர்கள்.
இப்போது பணவீக்கத்தின் அளவு 9.89 சதவிகிதமாக உள்ளது. சில மாதங்கள் முன்பு வரை இது மைனஸில் இருந்தது நினைவிருக்கலாம். அன்று, இது சரியான அளவல்ல என்று கூறி, உணவுப் பொருள் பணவீக்கத்தை மட்டும் முக்கிய அளவீடாகக் கொண்டது நிதித்துறை. இப்போது, மீண்டும் பழையபடி மொத்த விலைக் குறியீட்டெண்ணை கணக்கில் காட்ட முயல்வதும் கவனிக்கத்தக்கது.
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications