Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பென்னாகரத்தில் நாளை வாக்குப் பதிவு: பலத்த பாதுகாப்பு- ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் 2 மின்னணு இயந்திர

Subscribe to Oneindia Tamil

பென்னாகரம்: பென்னாகரம் இடைத் தேர்தலுக்குத் தயாராகி விட்டது. தொகுதியின் அனைத்து எல்லைகளும் சீல் வைக்கப்பட்டுள்ளன.

பென்னாகரம் சட்டசபைத் தொகுதியில் நாளை இடைத் தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். அங்கு மொத்தம் 250 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்தும் பதட்டமானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 68 சாவடிகள் மிகவும் பதட்டமானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுகவின் இன்பசேகரன், அதிமுகவின் அன்பழகன், பாமகவின் தமிழ்க்குமரன், தேமுதிகவின் காவேரி வர்மன் உள்பட மொத்தம் 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். எனவே ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் தலா 2 இயந்திரங்கள் வாக்களிக்க வைக்கப்படும்.

அனைத்து பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய, மாநில பாதுகாப்புப் படையினர் கிட்டத்தட்ட 3000 பேர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு இன்டர்நெட் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. வாக்குப் பதிவை தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தர்மபுரியில் இருந்தபடி நேரில் கண்காணிக்கவுள்ளார்.

தேர்தல் விதிமீறல்கள் நடைபெறாமல் இருக்கும் பொருட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று மாலை 5 மணியுடன் பிரசாரத்திற்காக வந்த வெளியூர்க்கார்ர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டிருந்த்து. இதை மீறி யாரேனும் பதுங்கியுள்ளனரா என்பதை அறிய லாட்ஜுகள், ஹோட்டல்கள், கல்யாண மண்டபங்கள் உள்ளவற்றில் நேற்று இரவு முதல் தீவிர சோதனை நடந்து வருகிறது.

விடிய விடிய ரோந்து வந்த பார்வையாளர்கள்...

பென்னாகரம் தொகுதி தேர்தல் பார்வையாளர்கள் நேற்று மாலை முதல் தொகுதியை வலம் வந்த வண்ணம் இருந்தனர். இரவும் அவர்கள் பல்வேறு பகுதிகளில் ரோந்து வந்தனர்.

அப்போது இண்டூர் பகுதியில் 3 மர்ம வாகனங்கள் நடமாடுவதைக் கவனித்த அவர்கள் அவற்றைப் பறிமுதல் செய்ய உத்தரவிட்டனர். இதையடுத்து அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இண்டூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

பென்னாகரத்திற்குள் வெளியூர் வாகனங்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொகுதி எல்லையில் 7 வாக்குச் சாவடிகளும், உள்பகுதிகளில் 11 சோதனைச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியின் அனைத்து எல்லைப் பகுதிகளும் சீல் வைக்கப்பட்டுள்ளன.

அனைத்து வாக்குச் சாவடிகளிக்கும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட தேர்தல் பொருட்களை அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மலைப் பகுதிகளில் உள்ள சாவடிகளுக்கு கழுதைகள் மூலம் வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டு செல்கின்றனர்.

எஸ்.எம்.எஸ். மூலம் நிலவரத்தைத் தெரிவிக்க உத்தரவு...

பென்னாகரம் தொதியில் மொத்தம் 2 லட்சத்து 1008 வாக்காளர்கள் உள்ளனர். மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்தில் அதிகபட்சமாக 16 வேட்பாளர்களின் பெயர், சின்னங்களே பொருத்த முடியும். ஆனால் பென்னாகரம் தொகுதியில் 31 பேர் போட்டியிடுவதால், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 2 மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.

தேர்தல் அதிகாரிகள் மற்றும் வேட்பாளர்கள், அவர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் பெயர், சின்னம் பொருத்தப்பட்டு சீல் வைத்து தேர்தல் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருந்தது.

இன்று காலை முதல் அந்த மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அந்தந்த வாக்கு சாவடிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டு வருகிறது. தேர்தலுக்கு தேவையான எழுது பொருட்கள், அழியாத மை உள்ளிட்ட பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வாக்குசாவடிகளில் தலா 2 வெப்காமிரா பொருத்தப்பட்டுள்ளது. வாக்காளர்கள் வாக்கு சாவடிக்கு செல்லும் முன் அவர்களின் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள எண்,வரிசை பதிவு செய்யப்படும். அப்போது வாக்குசாவடியில் அமைக்கப்பட்டுள்ள திரையில் வாக்காளர்கள் போட்டோ தெரியும்.

வாக்காளர் அடையாள அட்டையில் இருக்கும் போட்டோவும், திரையில் தெரியும் புகைப்படமும் ஒன்றாக இருந்தால் மட்டுமே வாக்காளர் வாக்கு சாவடிக்குள் அனுப்பி வைக்கப்படுவார். ஓட்டுப்பதிவு லேப்டாப்பில் பொருத்தப்பட்டுள்ள வெப்காமிரா மூலம் வீடியோ எடுக்கப்படுகிறது. இதை கண்காணிக்கும் பணியில் கல்லூரி மாணவர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி ஓட்டுபோடும் வகையில் துணை ராணுவத்தினர் மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். பிரச்சினை எங்காவது ஏற்பட்டால் அங்கு விரைந்து செல்ல தயார் நிலையில் கூடுதல் போலீசாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் அலுவலர்களுக்கு புதிய கட்டளைகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.

வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தால், தேர்தல் அலுவலர்கள் தகுந்த பாதுகாப்புடன் சென்று ஏன் வாக்களிக்கவில்லை என வாக்காளர்களிடம் நேரடியாக விசாரணை நடத்த வேண்டும்.

வாக்குப்பதிவு மையத்தில் ஏஜெண்டுகள், அலுவலர்கள் செல்போன் பயன்படுத்த கூடாது. வாக்குப்பதிவு குறித்து ஒவ்வொரு மணி நேரமும் எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற புதிய கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.

மாலை 3 மணியில் இருந்து 5 மணிவரை ஓட்டுப்பதிவு சதவீதம் ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். இதற்காக 250 வாக்குசாவடிகளுக்கும் தலா ஒரு செல்போன் வழங்கப்பட்டுள்ளது. இந்த எஸ்.எம்.எஸ். தகவல்களை இந்திய தேர்தல் ஆணையர், தமிழக தலைமை தேர்தல் ஆணையர், தர்மபுரி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான அமுதா ஆகியோர் ரகசிய குறியீடு மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இவை குறித்து தேர்தல் பார்வையாளர் ரேமாண்ட் பீட்டர் இன்று வருவாய் கோட்டாட்சியர் மகேஸ்வரி உள்ளிட்டோருடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

தர்மபுரி வந்தார் நரேஷ்குப்தா...

இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா இன்று காலை தர்மபுரி வந்து சேர்ந்தார். நாளை வாக்குப்பதிவு முடியும் வரை அவர் தர்மபுரியிலேயே தங்கியிருந்து வாக்குப்பதிவை கண்காணிக்கவுள்ளார்.

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வெப் காமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் நேரடியாக அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப் பதிவு நடைபெறுவதை நரேஷ் குப்தா தர்மபுரியில் இருந்தபடி கண்காணிப்பார்.

தொழிற்சாலைகளுக்கு விடுமுறை

இடைத்தேர்தலையொட்டி கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொகுதியில் உள்ள தொழிற்சாலைகள், கடைகள், நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள், பீடி தொழில்நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மற்றும் இதர நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஓகனேக்கல் வெறிச்சோடியது...

சுற்றுலாத் தலமான ஓகனேகல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் யாரும் வரக் கூடாது என்று தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. எனவே அங்கு யாரும் வரவில்லை. இதனால் ஓகனேக்கல் நீர்வீழ்ச்சிப் பகுதி வெறிச்சோடிக் காணப்படுகிறது. இதனால் அங்குள்ள படகோட்டிகள் தொழில் செய்ய முடியாமல் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

நாளை வாக்குப் பதிவு முடிந்தவுடன் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்படும்.

மார்ச் 30ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+