8ம் வகுப்பு படித்துவிட்டு 'கிளினிக்' நடத்திய போலி டாக்டர்கள் கைது!

டாக்டர்கள் எனக்கூறி மருத்துவம் பார்த்து வந்த மோசடி ஆசாமிகள் இருவரும் முறையே 8, 10ம் வகுப்பு மட்டுமே படித்துள்ளது தெரியவந்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் சேரன்மகாதேவி, வீரவநல்லூர், பத்தமடை உள்ளிட்ட பகுதிகளில் போலி டாக்டர்கள் இருப்பதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
இந்நிலையில், வீரவநல்லூரில் நாகர் சன்னதி தெருவில் கிளினிக் நடத்தி வரும் சத்யன் என்பவரிடம் வயிற்று போக்கால் அவதிப்பட்டு வந்த குட்டிகாலனியை சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவர் சிகிச்சைக்காக சென்றார்.
அவர் அளித்த சிகிச்சையில் பஞ்சவர்ணத்தின் கால் வீங்கியது. இதேபோல் மாரியப்பன் என்பவர் வீரவநல்லூர் ரயில்வே பீடர் ரோட்டில் கிளினிக் நடத்தி வரும் நம்பிராஜன் என்பவரிடம் சிகிச்சைக்கு சென்றார்.
சிகிச்சையில் மாரியப்பனுக்கும் கால் வீங்கி, உடலில் அலர்ஜி ஏற்பட்டது. இதனால் சந்தேகம் அடைந்த இருவரும் வீரவநல்லூர் போலீசில் தனி தனியாக புகார் அளித்தனர்.
அதன் பேரில் போலீசார் போலி டாக்டர் சத்யன், நம்பிராஜன் ஆகியோரை கைது செய்தனர். போலீசார் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் சத்யன் 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என தெரிந்தது.
அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராக இருந்ததும், பின்னர் வீட்டிலேயே கிளினிக் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததும் தெரிந்தது.
நம்பிராஜன் 10ம் வகுப்பு முடித்து மோர்மடம் என்ற பகுதியில் மீனா கிளினிக் என்ற பெயரி்ல் கிளினிக் வைத்து பலருக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார் என்பதும் தெரிய வந்தது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications