சேலம், நெல்லையைத் தொடர்ந்து கரூரிலும் சாலையில் கொட்டப்பட்ட காலாவதி மருந்து, மாத்திரைகள்
கரூர்: காலாவதியான மருந்து, மாத்திரைகளை குப்பைத் தொட்டியிலும், சாலையோரங்களிலும் கொட்டுவது அதிகரித்து வருகிறது. கரூரில் நான்கு இடங்களில் இவை கொட்டப்பட்டிருந்ததால் மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள காலாவதி மருந்து, மாத்திரை விவகாரத்தைத் தொடர்ந்து இதுபோன்ற மருந்துகளின் விற்பனையை தடுக்க தேவையான நடவடிக்கைகளை முதல்வர் கருணாநிதியின் உத்தரவின் பேரில் மருந்து கட்டுப்பாட்டு துறையினரும், காவல்துறையினரும் எடுத்து வருகின்றனர்.
மருந்து நிறுவனங்கள், மருந்துக் கடைகளில் அதிரடி சோதனைகள் நடந்து வருகின்றன. இதையடுத்து மருந்து வியாபாரிகள் பீதியடைந்துள்ளனர். குறிப்பாக மருந்துக் கடைகளில் காலாவதியான மருந்து, மாத்திரைகளை வைத்திருப்போர் பெரும் பீதியடைந்து அவற்றை யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக குப்பைத் தொட்டிகளிலும், சாலையோரங்களிலும் கொட்டி வருகின்றனர்.
சேலம், நெல்லையில் இதுபோல மருந்து, மாத்திரைகள் கொட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், கரூர் மாவட்டம் திருமாநிலையூரை அடுத்த ராயனூர் மெயின் ரோட்டில் குவியல் குவியலாக காலாவதியான மருந்து -மாத்திரைகள் கிடந்தன. இப்பகுதியில் மட்டும் 4 இடங்களில், மருந்து -மாத்திரைகளை கொட்டி உள்ளனர்.
இதே போல் கரூர்-திண்டுக்கல் 4 வழிச்சாலையில் காக்காவாடி மெயின் ரோட்டிலும் காலாவதியான மருந்து -மாத்திரைகள் கிடந்தன. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications