சான்டியாகோ: சிலியின் வடக்குப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
சான்டியாகோ: சிலியின் வடக்குப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. மக்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேறினர். பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் இருந்தும் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
எனினும் உயிர் சேதமோ, பெரியளவிலான பொருட்சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.
ரிக்டர் அளவில் 6.2 என பதிவாகி இருந்த இந்த நிலநடுக்கம், உள்ளூர் நேரப்படி நேற்று பகல் 11.52 மணிக்கு ஏற்பட்டதாக அமெரிக்க பூகம்பவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடக்கு சிலியின் அடாகமா பகுதியில் உள்ள கோபியாகோ என்ற இடத்தை மையமாகக் கொண்டு இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது.
சிலியில் இந்த மாதத்தில் ஏற்படும் இரண்டாவது சக்தி வாய்ந்த பூகம்பம் இது. கடந்த 4ம் தேதி சிலியில் 6.3 என்ற அளவிலான பூகம்பம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications