விதிமுறைகளை மீறினாரா மல்லையா?-விசாரணை ஆரம்பம்
டெல்லி: இந்திரா சர்வதேச விமான நிலைய விதிமுறைகளை மீறும் விதத்தில் தொழிலதிபர் விஜய் மல்லையா நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்த விசாரணையை சிவில் விமான பாதுகாப்பு குழு (The Bureau of Civil Aviation Security -BCAS) துவங்கியுள்ளது.
ஒரு நிகழ்ச்சிக்காக தனி ஏர் பஸ் விமானத்தில் டெல்லி வந்த தொழிலதிபரும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் உரிமையாளருமான விஜய் மல்லையா அங்கிருந்து ஹெலிகாப்டரில் காஜியாபாத் விமானத் தளத்துக்கு வந்தார்.
அங்கு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு அதே ஹெலிகாப்டரில் டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் வந்தவர், அங்கிருந்த தனது ஏர் பஸ் விமானத்தில் ஏறிப் புறப்பட்டார்.
ஹெலிகாப்டரிலிருந்து இறங்கிய பின்னர் வழக்கமாக மேற்கொள்ளப்படும் அனைத்து பாதுகாப்பு சோதனைகளையும் அவர் புறக்கணித்து, நேராக தனது தனி விமானத்துக்குள் ஏறிப் பறந்துவிட்டதாக குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது. ஆனால் இதனை மறுத்துள்ளது கிங்பிஷர் நிர்வாகம்.
ஆனால் மும்பையில் தனது ராயல் சேலஞ்சர்ஸ் அணி பங்கேற்கும் போட்டியைப் பார்க்கும் அவசரத்தில் விதிமுறைகளக் காற்றில் பறக்கவிட்டார் மல்லையா என்று இந்திரா காந்தி விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதனால் சிவில் விமான பாதுகாப்பு குழு இதுகுறித்த முறையான விசாரணையை தொடங்கியுள்ளது.
விமான நிலைய பாதுகாப்பு விதிகளை மீறுவது கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications