அசுத்த குடிநீர் - மணப்பாறையில் திமுக கவுன்சிலர்கள் போராட்டம்- பெண்கள் முற்றுகை - பதட்டம்
மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறையில், அசுத்தமான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதைக் கண்டித்து திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் குதித்துள்ளனர். பெண்கள் பெரும் திரளாக திரண்டு வந்து நகராட்சி அலுவலகத்தை குடங்களுடன் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மணப்பாறையில் பொதுமக்களுக்கு நகராட்சி நிர்வாகம் குடிநீர் விநியோகம் செய்து வருகிறது. ஆனால் இந்தத் தண்ணீர் குடிக்கத் தகுதியற்று மிகவும் அசுத்தமாக இருப்பதாக மக்கள் குமுறி வருகின்றனர்.
இதுதொடர்பாக பலமுறை மக்கள் கோரிக்கை விடுத்தும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து நேற்று திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் குதித்தனர். நேற்று இரவு முழுவதும் நகராட்சி அலுவலகத்திற்குள்ளேயே தங்கி போராட்டம் நடத்தினர்.
இன்று காலையிலிருந்து 6 திமுக, ஒரு காங்கிரஸ் கவுன்சிலர் ஆகியோர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை நூற்றுக்கணக்கான பெண்கள் காலிக் குடங்களுடனும், அசுத்தமான குடிநீர் அடங்கிய குடங்களுடனும் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆவேசப் போராட்டத்தில் குதித்தனர்.
இதையடுத்து அங்கு விரைந்து வந்த நகராட்சித் தலைவர், பெண்களை சமாதானப்படுத்தினார். இன்று மாலைக்குள் குடிநீரை சரி செய்வதாக அவர் உறுதியளித்தார். இதையடுத்து பெண்கள் போராட்டத்தைத் திரும்பப் பெற்றனர். இருப்பினும் திமுக கூட்டணி கவுன்சிலர்களின் போராட்டம் தொடருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications