கல்யாணத்திற்கு முன்பு செக்ஸ் - குஷ்பு பேச்சை நியாயப்படுத்தும் சுப்ரீம் கோர்ட் கருத்து: மடாதிபதிகள் க
ஹைதராபாத்: குஷ்பு பேசிய பேச்சை நியாயப்படுத்தும் வகையில், ராதையையும், கிருஷ்ணரையும் இழிவுபடுத்தும் வகையில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருப்பது கண்டனத்துக்குரியது என்று மேலும் பல மடாதிபதிகள் கூறியுள்ளனர்.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா ஸ்ரீபீடம் பூர்னானந்த சரஸ்வதி சுவாமி கூறுகையில், நீதிபதிகளின் தீர்ப்பு மீது யாரும் கருத்து கூற முடியாது. ஆனால் திருமணத்துக்கு முன்பு உறவு வைத்துக் கொள்வது தவறல்ல என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்து இருப்பது இந்து மதத்தை, இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக உள்ளது. அத்துடன் கிருஷ்ணன்-ராதை உறவை மேற்கொள்காட்டியுள்ளனர். இதுவும் இந்து மதத்தை புண்படுத்தி இருக்கிறது. ராதா-கிருஷ்ணர் பற்றி முழுமையாக தெரிந்து பேச வேண்டும்.
இதுகுறித்து மாற்று கருத்தை கோர்ட்டு வெளியிட வேண்டும். இது பற்றி குடியரசுத் தலைவரிடம் முறையிடுவோம் என்றார்.
அதேபோல ஆந்திராவைச் சேர்ந்த குர்தாலம் பீடாதிபதி ஸ்ரீசித்தேஸ்வர ஆனந்த பாரதி கூறுகையில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ராதா-கிருஷ்ணர் பற்றி கருத்து தெரிவித்து இருப்பது தவறு. திருமணம் செய்யாமல் வாழ்ந்தார்கள் என்று கூறுவது எங்களை காயப்படுத்துகிறது.
அவர்களுக்கிடையே என்ன உறவு இருந்தது என்பதை தெரிந்து கொள்ளாமல் மதத்தை காயப்படுத்தும் விதமாக சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்து இருப்பது வேதனை தருகிறது.
பிருந்தாவன சாஸ்திரப்படி ராதா-கிருஷ்ணர் ஆதி தம்பதிகள். இவர்கள் தான் சிவன், மகாவிஷ்ணு, பிரம்மா ஆகியோரை சிருஷ்டித்தார்கள். ராதாவுக்கு 11 வயதும், கிருஷ்ணருக்கு 8 வயதும் இருக்கும் போது காதல் இருந்தது. அவர்கள் அப்போதும் சேர்ந்து வாழ வில்லை என்று கூறினார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications