மதுரை திருமங்கலம் இளைஞர் காங். தேர்தலில் வன்முறை - அரிவாள் வெட்டு
மதுரை: மதுரை அருகே திருமஙகலத்தில் நடந்த இளைஞர் காங்கிரஸ் தொகுதிப் பிரதிநிதி தேர்தலில் பெரும் வன்முறை மூண்டது. இதில் முன்னாள் கவுன்சிலர் அரிவாளால் வெட்டப்பட்டார். படுகாயமடைந்த நிலையில் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நடந்து வருகிறது. இதில் தற்போது முக்கிய தேர்தலாக, தொகுதிப் பிரதிநிதிகளைத் தேர்வு செய்யும் தேர்தல் நடந்து வருகிறது.
திராவிடக் கட்சிகள் சட்டச்சபை, லோக்சபா தேர்தலின்போது எப்படி செயல்படுவார்களோ அதேபோல, இந்த தொகுதிப் பிரதிநிதிகள் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் அனைத்துக் கோஷ்டிகளும் தங்களது ஆதரவாளர்கள் வெற்றி பெறுவதற்காக பெரும் தள்ளுமுள்ளில் இறங்கியுள்ளனர்.
தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க ஆயிரக்கணக்கில் பணத்தைக் கொடுத்து ஆதரவு திரட்டி வருவதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் தற்போது அது அரிவாள் வெட்டு என்று அடுத்த கட்டத்திற்குத் தாவியுள்ளது.
மதுரை திருமங்கலம் தொகுதிப் பிரதிநிதியைத் தேர்வு செய்ய அங்கு தேர்தல் நடந்தது. தேர்தல் முடிந்து முடிவு அறிவிக்கப்பட்டபோது அதை ஏற்காத ஒரு கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் மோதலில் இறங்கினர்.
இரு தரப்பினருக்கு இடையே நடந்த பயங்கர மோதல் நடந்தது. அப்போது முன்னாள் கவுன்சிலரான சரவணப்பாண்டியன் என்பவரை ஒரு பிரிவினர் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் படுகாயமடைந்தார்.
இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.
சமீபத்தில்தான் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இதுபோன்று ஆயுதங்களால் இரு தரப்பினர் தாக்கிக் கொண்டு பெரும் வன்முறையில் ஈடுபட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications