புழல் மத்திய சிறையில் கைதிகள் அடிதடி-உண்ணாவிரதம், சமரசப் பேச்சு
சென்னை: சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகளுக்குள் ஏற்பட்ட பயங்கர மோதலில் ஒரு கைதி படுகாயமடைந்தார். அந்த கைதியை தாக்கியவரை வேறு இடத்திற்கு மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100 கைதிகள் உண்ணாவிரதம் இருந்து வருவதால் சிறை அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
சென்னை புழல் மத்திய சிறையில் பிளாக் 1 மற்றும் பிளாக் 2 என இரு பிரிவுகள் உள்ளன. பிளாக் 2ல் வியாசர்பாடி மகாகவி பாரதிநகரைச் சேர்ந்த ஒரு ரவுடியின் சகோதரர் முருகன் என்பவர் அடைக்கப்பட்டுள்ளார்.
அதே பிளாக்கில் பிச்சை என்பவரும் அடைக்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு முருகனுக்கும், பிச்சைக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் கைதி பிச்சை படுகாயமடைந்தார்.
இதையடுத்து சிறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பிச்சையை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிச்சையை தாக்கி காயப்படுத்திய கைதி முருகனை பிளாக் 2ல் இருந்து மற்றொரு பிரிவில் அடைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிளாக் 2ல் உள்ள கைதிகள் சுமார் 100 பேர் சிறை அதிகாரிகளுடன் தகராறில் ஈடுபட்டனர்.
மேலும் 100 கைதிகளும் சுவர் மேல் ஏறி நின்று கொண்டு முருகனை உடனடியாக மீண்டும் பிளாக் 2ல் அடைக்க வேண்டும். இல்லாவிட்டால் சுவரில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்வோம் என்று மிரட்டியதாகத் தெரிகிறது.
மேலும் இன்று காலை முதல் 100 கைதிகளும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
இதையடுத்து அவர்களுடன் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டுவிட்டதாகத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications