8 பில்லியன் டாலர் லாபத்தில் சிட்டி குழும பங்குகளை விற்கிறது அமெரிக்கா!
Subscribe to Oneindia Tamil

கடந்த 2008-ம் ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடியைச் சமாளிக்க அமெரிக்க அரசுக்கு 7.7 பில்லியன் பங்குகளைக் கொடுத்து, பதிலுக்கு 25 பில்லியன் டாலர் தொகையைப் பெற்றுக் கொண்டது சிட்டி குழுமம். இந்த பங்குகளை உரிய நேரத்தில் விற்றுக் கொள்ளப் போவதாக அப்போதே கூறியிருந்தது அமெரிக்க கருவூலத் துறை.
இந்தப் பங்குகள் விலை ஆரம்ப கட்டத்தில் சற்று இறங்குமுகத்தில் இருந்ததால், மற்ற முதலீட்டாளர்களைப் போலவே விற்காமல் அமைதி காத்தது அமெரிக்கா.
இப்போது பங்குகளின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. எனவே நல்ல விலை வரும்போதே விற்று விட முடிவு செய்துள்ளது. திங்களன்று பங்கு ஒன்றுக்கு 8 சென்டுகள் விலை ஏறியது.
இந்த விலையில் அமெரிக்கா தன்னிடமுள்ள சிட்டி பங்குகளை விற்றால் 8 பில்லியன் வரை லாபம் கிடைக்கும். எனவே விற்பனைக்கான நடவடிக்கைகளைத் துவங்கியுள்ளது அமெரிக்கா.












Click it and Unblock the Notifications