மதுரையில் ஓடும் பஸ்சில் வாலிபர் கொலை
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை ஓடும் பஸ்சில் வாலிபர் வெட்டிக் கொல்லப்பட்டார்.
அவனியாபுரத்தில் இருந்து மாட்டுத் தாவணிக்கு சென்ற நகரப் பேருந்தில் ஏறிய 4 பேர் கொண்ட கும்பல் தெற்குவாசல் அருகே பஸ் சென்றபோது அதில் பயணித்த இளைஞர் ஒருவரை வெட்டிச் சாய்த்துவிட்டு இறங்கி ஓடிவிட்டது.
படுகாயமடைந்த அந்த வாலிபர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
ஓடும் பஸ்சி்ல் நடந்த இந்தக் கொலையைக் கண்டு பஸ்சில் பயணித்த பயணிகள் அலறிடினர்.
பயணிகள் கண் முன் நடந்த இந்த கொலைச் சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications