ரஷ்யாவில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் - இரட்டை தற்கொலைப் படைத் தாக்குதலில் 9 பேர் பலி
மாஸ்கோ: ரஷ்யாவில் மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மாஸ்கோவில் சில நாட்களுக்கு முன்பு தாக்குதல் நடத்திய அவர்கள், இன்று வடக்கு காகஸ் பகுதியில் உள்ள தாஜஸ்தான் மாகாணத்தில் பெரும் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
தாஜஸ்தான் மாகாணத்தில் உள்ள கிஸ்லியர் நகரில் அடுத்தடுத்து இரண்டு தற்கொலைப் படைத் தாக்குதல்கள் நடந்தன. இதில் உள்ளூர் போலீஸ் தலைமை அதிகாரி உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட அதிகாரியின் பெயர் விட்டாலி வெடர்னிகோவ். இவரது சீருடையை வைத்து உடல் அடையாளம் காணப்பட்டது.
முதல் தாக்குதல் இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு நடந்தது. பள்ளிக்கூடம் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் வைக்கப்பட்டிருந்த குண்டை அந்த காரின் டிரைவரே வெடிக்கச் செய்தார்.
அடுத்த ஒரு மணி நேரத்தில், போலீஸ் சீருடை அணிந்த ஒரு நபர் இரண்டாவது குண்டை வெடிக்கச் செய்தார். அப்பகுதியில் போலீஸார் அதிக அளவில் நடமாடிக் கொண்டிருந்தனர். எனவே போலீஸாரைக் குறி வைத்து இந்தத் தாக்குதல் நடந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
2வது முறையாக தீவிரவாதத் தாக்குதல் நடந்திருப்பதால் ரஷ்யாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications