ஆன்லைன் ரயில் டிக்கெட் சேவைக் கட்டணம் நாளை முதல் குறைப்பு
சென்னை: இ டிக்கெட் எனப்படும் ஆன்லைன் ரயில் டிக்கெட் சேவைக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. நாளை முதல் இது அமலுக்கு வருகிறது.
ரயில்வே பட்ஜெட்டில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதன்படி ஏப்ரல் 1ம் தேதியான நாளை முதல் இது அமலுக்கு வருகிறது.
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் இணையதளம் மூலம் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலம் இ-டிக்கெட் முன்பதிவு செய்வது நாடு முழுவதும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
தினசரி நடைபெறும் ரயில்வே முன்பதிவில் 35 சதவீதம் ஆன்லைன் மூலம்தான் நடைபெறுகிறது. இன்டர்நெட் வசதி இருந்தால் மட்டும் போதும். தினசரி காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த சேவையை எங்கிருந்தபடியும் பெற முடியும்.
இந்தச் சேவையை வழங்குவதற்காக ஐஆர்சிடிசி நிறுவனத்துக்காக சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இப்போது இந்தக் கட்டணம்தான் குறைக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டண விகிதப்படி, தூங்கும் வசதியுள்ள இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் பயணம் செய்ய ஒரே டிக்கெட்டில் அதிகபட்சம் 6 பேருக்கு முன்பதிவு செய்யலாம். இதற்கான சேவை கட்டணம் இனி ஒரே சீராக ரூ. 10 மட்டுமே வசூலிக்கப்படும்.
பகல் நேரத்தில் இயக்கப்படும் விரைவு ரயில்களில் உள்ள சேர் கார் பெட்டிகள், 3 அடுக்கு ஏசி, முதல் வகுப்பு, 2 அடுக்கு ஏசி, முதல் அடுக்கு ஏசி வகுப்பு பெட்டிகளில் பயணம் செய்ய இனி சேவை கட்டணம் ரூ. 20 மட்டுமே சீராக வசூலிக்கப்படும்.
ரயில் டிக்கெட் முன்பதிவு மற்றும் இ}டிக்கெட் பெறுவது குறித்து பல்வேறு தகவல்களை அறிய 24 மணி நேரமும் செயல்படும் ஐ.ஆர்.சி.டி.சி. (ஹெல்ப் லைன்) தொ.பே. எண் 044}2530 0000 ஆகும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications