ஊட்டி: சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி மோசடி செய்த 2 பேர் கைது
ஊட்டி: ஊட்டியில் வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி, பாஸ்போர்ட் மற்றும் பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் பகுதியைச் சேர்ந்தவர் கோபாலன்(62). இவரது மகன் நவனீத்கோபாலன்(23).
இவர்கள் நவனீத் டூட்டி டூர் சர்வீஸ் என்ற பெயரில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு பொது மக்களை சுற்றுலா அழைத்து செல்லும் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த நிறுவனத்தின் மூலம், வெளிநாடுகளுக்கு சுற்றுலா அனுப்புவதற்காக ஆள் சேர்ப்பு நடவடிக்கையில் நவனீத்கோபாலன் ஈடுபட்டார்.
இதன் மூலம் குன்னூரில் இரண்டு பேரிடமும், அதிகரட்டியில் 16 பேரிடமும் ரூ.5 லட்சத்து 13 ஆயிரம் வசூல் செய்துள்ளார்.
மேலும் அவர்களிடம் பாஸ்போர்ட் ஆவணங்களையும் பெற்று, ஒரு ஆண்டு காலமாக சுற்றுலா அழைத்து செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த 18 பேரும், தங்களது பணம் மற்றும் பாஸ்போர்ட்டை திரும்ப கேட்ட போது அவர்கள் தரவில்லை.
இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று கூடி கொலக்கம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், சுற்றுலா நிறுவனத்தினர் பணம் மற்றும் பாஸ்போர்ட்களை திரும்ப ஒப்படைக்க 15 நாள் அவகாசம் அளித்தனர்.
எனினும் கோபாலன் மற்றும் நவநீத் கோபாலன் ஆகியோர் பாஸ்போர்ட் மற்றும் பணத்தை திருப்பித் தரவில்லை. இதையடுத்து இருவரையும் மோசடி வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications