நாகப்பா கொலை வழக்கு - வீரப்பன் கூட்டாளிகள் 19 பேரும் விடுதலை
பெங்களூர்: கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா கடத்திக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 19 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சந்தனக் கடத்தல் வீரப்பனால் 2002ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி நாகப்பா கடத்தப்பட்டார். கொள்ளேகால் அருகே நாகப்பாவை அவரின் பண்ணை வீட்டுத் தோட்டத்தில் இருந்து வீரப்பனும் அவரது கூட்டாளிகளும் கடத்திச் சென்றனர்.
இதன் பின்னர் டிசம்பர் 8ம் தேதி, வனப்பகுதியில் நாகப்பா சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் பணமாக கிடந்தார்.
இதுதொடர்பாக வீரப்பன் மற்றும் கூட்டாளிகள் சேத்துக்குழி கோவிந்தன் உள்பட 23 பேர் மீது சாம்ராஜ்நகர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதுவரை 44 சாட்சிகள் உள்பட மொத்தம் 199 பேரிடம் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையே, குற்றம்சாட்டப்பட்ட வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், சந்திரே கௌடா, சேதுமணி ஆகிய நான்கு பேர் போலீசார் வேட்டையில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
குற்றம்சாட்டப்பட்ட மற்ற 19 பேருக்கு எதிரான வழக்கு தொடர்ந்து நடந்துவந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
குற்றம்சாட்டப்பட்ட 19 பேரையும் விடுதலை செய்து நீதிபதி மல்லப்பா உத்தரவிட்டார். குற்றம் சுமத்தப்பட்டவர்களை அடையாளம் காட்ட நாகப்பா குடும்பத்தினர் தவறிவிட்டனர், மேலும் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக சாட்சியங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என்று கூறி 19 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நாகப்பாவின் மனைவி பரிமளா, தனது கணவருக்கு மேலும் ஒரு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் கூறி இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications