சோமாலியா கடல் பகுதியில் இந்தியர்கள் 11 பேர் கடத்தல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியர்கள் 11 பேருடன் துபாய் நிறுவனத்துக்கு சொந்தமான சரக்கு கப்பலை சோமாலியா கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.
துபாயில் இருந்து குஜராத்துக்கு சரக்கு எடுத்துவந்து இறக்கிவிட்டு திரும்பிய போது, சோமாலியாவின் மொகாடிஷூ கடல் பகுதியில் கொள்ளையர்கள் கப்பலை சுற்றிவளைத்து கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
கடத்தப்பட்ட கப்பல் துபாயில் உள்ள அல் பராரி நிறுவனத்துக்கு சொந்தமானது. இந்த கப்பலில் குஜராத்தின் மாண்ட்வி பகுதியைச் சேர்ந்த 11 தொழிலாளர்கள் இருந்ததாகவும் தெரிகிறது.
பணம் கேட்டு மிரட்டுவதற்காக இவர்களை சோமாலி கொள்ளையர்கள் கடத்திச் சென்றிருப்பதாக நேற்றிரவு கப்பல் நிறுவன அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
கடத்தப்பட்டவர்களை மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications