1528 முன்னாள் விடுதலைப் புலி வீர்ர்களை விடுவிக்க ராஜபக்சே உத்தரவு
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 1528 பேரை இலங்கை ராணுவ முகாமிலிருந்து விடுவிக்க உத்தரவிட்டுள்ளார் அதிபர் ராஜபக்சே.
யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்திருந்த ராஜபக்சே இதுகுறித்துப் பேசுகையில், "தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உண்மையாக பாடுபடுகிறேன். என்னுடைய இந்த முயற்சிகள் தொடர தமிழ் மக்களாகிய உங்களின் 'உத்தரவு' இந்த தேர்தலில் எனக்குத் தேவை.
புலிகள் இயக்கத்திலிருந்த பல மிக இளம் வயதினர். உடலுறுப்புகளை இழந்துள்ளனர். அவர்களின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன். விரைவில் தங்கள் குடும்பத்தினருடன் இவர்கள் சேர்த்து வைக்கப்படுவார்கள். இப்போது முதல் கட்டமாக 1528 பேர் விடுவிக்கப்படுகிறார்கள்" என்றார்.
இதுகுறித்து இலங்கை மறுகுடியேற்ற அமைச்சர் ரிசார்ட் பதியுதீன் கூறுகையில், "இன்று விடுவிக்கப்பட்டும் முன்னாள் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களில் 1175 பேர் உடல் ஊனமுற்றவர்கள். 175 பேர் யாழ் பல்கலைக் கழக மாணவர்கள். இவர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தோடு இணைவார்கள். யாழ் பல்கலைக் கழக மாணவர்களை மீண்டும் அங்கேயே தங்க வைக்க ஏற்பாடு செய்யப்படும்..." என்றார்.
ஏற்கெனவே சிறுவர் போராளிகள் சிலரை இலங்கை அரசு விடுவித்துள்ளது.
இன்று விடுவிக்கப்படும் 1528 போராளிகளையும் அவர்களது பெற்றோருடன் ஒப்படைக்கும் நிகழ்ச்சி வவுனியா பூந்தோட்டப் பகுதியில் நடக்கிறது. இதில் அதிபர் ராஜபக்சே பங்கேற்கிறார்.












Click it and Unblock the Notifications