95 மாற்றுத் திறனாளிகளுக்கு ஆசிரியர் வேலை- உத்தரவை வழங்கினார் கருணாநிதி
சென்னை: 95 மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசின் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் வேலை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவுகளை முதல்வர் கருணாநிதி இன்று அவர்களிடம் வழங்கினார்.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மனித சமுதாயத்தில் காது கேளாதவராய் கண் தெரியாதவராய் வாய் பேச முடியாதவர்களாய் கை கால்களைப் பயன்படுத்த இயலாதவர்களாய் மன நோயாளிகளாய் உள்ள அனைவரையுமே ஊனமுற்றோர் என்பதற்குப் பதிலாக ஓர் அவயவத்தின் செயல்பாட்டுக் குறையால் அவர்களுடைய மற்றைய திறன் மேலும் ஒரு பங்கு சிறப்புறுகிறது என்ற அடிப்படையில் அவர்களை "மாற்றுத் திறனாளிகள்' என்று அழைக்கின்ற முறை 2007ஆம் ஆண்டிலேயே ஐக்கிய நாடுகள் அவையில் விவாதிக்கப்பட்டு ஒரு சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் "ஊனமுற்றோர்' என்ற சொல்லால் அழைக்கப் படுபவர்கள், "மாற்றுத் திறனாளிகள்' என அழைக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் கருணாநிதி ஏற்கனவே அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து 2010-2011ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் "மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துறை முதலமைச்சரின் நேரடி மேற்பார்வையில் இயங்கும்' என அறிவிக்கப்பட்டதற்கேற்ப தலைமைச் செயலகத்தில் "மாற்றுத் திறனாளிகள் நலத்துறை' எனும் புதிய துறை உருவாக்கப்பட்டு அத்துறையின் செயலாளராக ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியும் முதலமைச்சர் கருணாநிதியால் நியமனம் செய்யப்பட்டு பொறுப்பேற்றுள்ளார்.
இந்நிலையில் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசுத் துறைகளில் நியமனம் வழங்குவதிலும் தமிழக அரசு சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது. பள்ளிக் கல்வித் துறையைப் பொறுத்தவரை 2006ஆம் ஆண்டிற்கு பின் இதுவரை 58 ஆயிரத்து 225 ஆசிரியப் பெருமக்கள் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்குள் 236 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளும், 549 கைகால்களில் குறைபாடுகள் கொண்ட மாற்றுத் திறனாளிகளும் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் சமூக நலத்துறையின் சிறப்புத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 47 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாகப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் 300 பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களில் இனச்சுழற்சி விதிகளைத் தளர்த்தி பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை பட்டதாரி ஆசிரியர்களாகப் பணி நியமனம் செய்திட அரசு சிறப்பு அனுமதி வழங்கியதன் பேரில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் 187 பேர் அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டனர்.
ஆக 2006க்குப் பின் இதுவரை 470 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளும் 549 கை கால்களில் குறைபாடுகள் கொண்ட மாற்றுத் திறனாளிகளும் என மொத்தம் 1019 பேர் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இத்துடன், தற்போது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 95 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்து அவர்களில் 10 பேருக்கு நியமன ஆணைகளை முதலமைச்சர் கருணாநிதி வழங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், 95 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் அனைவரையும் ஒரு சேர கண்ட முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் அனைவருக்கும் தாமே நேரடியாகப் பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்துக்களை கூறினார்.இன்று பணி நியமன ஆணைகள் பெற்ற 95 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளில் 68 பேர் ஆண்கள் 27 பேர் பெண்கள் ஆவர். இந்த 95 மாற்றுத் திறனாளிகளுடன் சேர்ந்து தமிழக அரசு உயர்நிலை மற்றும் மேல்
நிலைப் பள்ளிகளில் இதுவரை 29 பேர் முதுகலை ஆசிரியர்களாகவும் 856 பேர் பட்டதாரி ஆசிரியர்களாகவும், 22 பேர் ஆசிரியப் பயிற்றுநர்களாகவும், 227 பேர் இடைநிலை ஆசிரியர்களாகவும் என மொத்தம் 1114 மாற்றுத் திறனாளிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications