முடிந்தால் வழக்குப் போடுங்கள் – சோயப்பின் ‘முதல் மனைவி’ குடும்பத்திற்கு மச்சான் சவால்!
கராச்சி: சோயப்புடன் உங்களது மகளுக்கு திருமணம் நடந்திருப்பதாக கூறும் நீங்கள் முடிந்தால் கோர்ட்டில் வழக்குப் போடுங்கள். அதை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆயிஷா என்ற பெண்ணின் தந்தை அகமது சித்திக்கிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீர்ர் சோயப் மாலிக்கின் மைத்துனர் சவால் விட்டுள்ளார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆயிஷா சித்திக்கி என்ற பெண்ணுக்கும், சோயப் மாலிக்குக்கும் இடையே திருமணம் நடந்தாத சில ஆண்டுகளாகவே சர்ச்சை உள்ளது. இந்த நிலையில்தான் சானியா மிர்ஸாவுக்கும் சோயப் மாலிக்குக்கும் திருமணம் நடக்கப் போவதாக செய்திகள் வெளியாகின.
இதையடுத்து ஆயிஷாவின் தந்தையான அகமது சித்திக்கி அளித்த பேட்டியில், சானியாவின் பெற்றோர் சோயப் மாலிக்கிடம் ஏமாறப் போகிறார்கள். சோயப் மாலிக் எனது மகளை மணந்த்து உண்மை. அதற்கான ஆதாரம் உள்ளது. எனவே முதலில் அவர் எனது மகளை விவாகரத்து செய்ய வேண்டும். பிறகுதான் சானியாவை மணக்க வேண்டும். இல்லாவிட்டால் கோர்ட்டுக்குப் போவேன். உலமாக்களை அணுகி, சோயப்புக்கு பாத்வா விதிக்க்க் கோருவேன் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்த சோயப் மாலிக்கின் அக்காள் கணவர் இம்ரான் பதிலளித்துள்ளார். கராச்சியில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், செத்துப் போன பிரச்சினையை தேவையில்லாமல் இப்போது எழுப்பப் பார்க்கிறார் அகமது சித்திக்கி. மலிவான விளம்பரம் தேடிக் கொள்ள முனைகிறார்.
சோயப் ஒருபோதும் ஆயிஷாவை திருமணம் செய்யவில்லை என்று ஏற்கனவே நாங்கள் தெளிவாக கூறியுள்ளோம். அவர்கள் வெறும் நண்பர்களாக மட்டுமே இருந்தனர். ஒரு பிரச்சினை காரணமாக அந்த நட்பும் கூட முறிந்து போய் விட்டது.
ஆனால் இந்தப் பிரச்சினையை பெரிதாக்க அகமது நினைத்தால், கோர்ட்டுக்கு போக நினைத்தால் அதை நாங்கள் வரவேற்கிறோம். அவர் கோர்ட்டில் வழக்கு தொடரலாம்.
இஸ்லாமியச் சட்டங்களின்படி திருமணம் நடந்த்தாக பெண் வீட்டார் கூறினால் அதற்கான ஆதாரங்களை அவர்கள் தாக்கல் செய்ய வேண்டும். அதை விட்டு விட்டு வெறுமனே மீடியாக்கள் மூலம் பேசிக் கொண்டிருக்கக் கூடாது.
இந்த சர்ச்சையால் சோயப், சானியாவின் திருமணத்தில் எந்தவிதப் பாதிப்பும் வராது என்றார் அவர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications