காஷ்மீரில் ரயில் தண்டவாளம் தகர்ப்பு - தீவிரவாதிகள் அட்டகாசம்!

காஷ்மீர், புல்வாமா மாவட்டத்தில் உள்ள காகாபோரா நகருக்கு அருகே குல்பக் கிராமத்தில் ரயில்வே பாதையில் நேற்று இரவு சுமார் 10 மணிக்கு மேல் தீவிரவாதிகள் வெடிகுண்டுவைத்துள்ளனர்.
இந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியதில் சுமார் 2 முதல் 3 மீட்டர் வரை தண்டவாளம் தகர்த்தெறியப்பட்டது. இதனால் அப்பகுதியில் ரயில்பாதை கடுமையாக சேதமடைந்தது.
இன்று அதிகாலை முதல் ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. பாதை பழுதடைந்ததால் நேற்று இரவு அந்த தடத்தில் ரயில்கள் இயக்கப்படவில்லை.
இதனால் புலவாமா மற்றும் அனந்தநாக் பகுதிகளில் இருந்து ஸ்ரீநகர், பாட்கம், பாரமுல்லா ஆகிய ஊர்களுக்கு தினசரி செல்லும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்ட இந்த ரயில் பாதை, வடக்கு மற்றும் தெற்கு காஷ்மீரை இணைக்கும் தடமாக திகழ்கிறது.
காஷ்மீரில் தீவிரவாதிகள் தண்டவாளத்தை தகர்த்து ரயில் சேவையை முடக்குவது இதுவே முதல்முறை என போலீசார் கூறுகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications