தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை: அசாமில் புதிய சட்டம்!
குவஹாத்தி: அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு முதல் 24 மணி நேரம் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என அசாம் மாநில அரசு சட்டம் இயற்றி உள்ளது.
சுகாதார வசதிகளை பெறும் உரிமை அனைத்து குடிமக்களுக்கும் உள்ளதை உறுதி செய்யும் இதுபோன்ற சட்டத்தை இந்தியாவிலேயே முதல்முறையாக அறிமுகப்படுத்தி இருப்பதாக அசாம் சுகாதாரத் துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.
அசாம் பொது சுகாதார சட்டம், 2010 என்ற இந்த சட்டம் நேற்று முன்தினம் அசாம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
நாட்டில் ஏற்பட்டுள்ள மருத்துவ தொழில்நுட்ப வசதிகள் ஏழை, பணக்காரர் என்ற பேதமின்றி, பாகுபாடின்றி அனைத்து மக்களுக்கும் பயனளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இச்சட்டத்தை கொண்டு வந்ததாக அமைச்சர் கூறுகிறார்.
இச்சட்டத்தின் படி, பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் திடீர் மாரடைப்பு, விபத்து போன்ற அவசரகால சூழலில் அரசு மருத்துவமனைகளைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை.
அருகாமையில், தனியார் மருத்துவமனைகள் உட்பட எந்த மருத்துமனை இருந்தாலும் அதில் சேர்ந்து இலவசமாக அவசர சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளலாம்.
அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்கு தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளிடம் எந்த விட கட்டணமும் வசூலிக்கக் கூடாது.
இதற்கு பல்வேறு தனியார் மருத்துவமனை அதிபர்களும் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.
ஆனால், இவ்வாறு சட்டம் இயற்றி இருப்பது மிகவும் துணிச்சலான செயல் என டெல்லியில் உள்ள 'எய்ம்ஸ்' இயக்குனர் ஆர்.சி.டேக்கா கூறியுள்ளார்.
எப்படியானாலும், இந்த சட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றித் தீருவோம் என்ற முடிவில் அசாம் அரசு உள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications