அம்பானியை கதிகலங்க வைத்த சென்னை நுகர்வோர்!

ஆனால் இதை நிரூபிக்க அவருக்கு ஏழாண்டு காலம் ஆகியுள்ளது.
சென்னையைச் சேர்ந்தவர் ஸுல்ஃபிகர் அன்னெரன்புர்ல்வாலா. டெலிபோன் ஹார்ட்வேர் சப்ளையரான இவர் கடந்த 2003ம் ஆண்டில் சென்னையில் உள்ள ரிலையன்ஸ் கடையில் செல்போன் ஒன்று வாங்கினார்.
ரூ.21 ஆயிரம் கொடுத்து வாங்கிய 24வது நாளிலேயே அந்த செல்போன் பிரச்னை செய்ய ஆரம்பித்துள்ளது.
இதுபற்றி அதே கடையில் வாய் மொழியாக பலமுறை புகார் கூறியுள்ளார். ஆனால் கடை ஊழியர்கள் இதோ, அதோ என போக்கு காட்டிக்கொண்டிருந்தனர்.
பின்னர் எழுத்துப்பூர்வமாக அந்த கடையில் ஒரு புகாரை தந்துவிட்டு, சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், ரிலையன்ஸ் மண்டல மற்றும் தலைமை அலுவலகத்துக்கும் புகார்களை அனுப்பியுள்ளார்.
ஆனால் ஒருவரும் இவரின் புகாரை கண்டுகொள்ளவில்லை. எனவே 2004ம் ஆண்டில் சென்னையில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் செய்தார்.
ஏ.பழனியப்பன் என்ற வழக்கறிஞர் ஸுல்ஃபிகருக்கு சார்பாக ஆஜராகி விவரங்களை நீதிமன்றத்தில் எடுத்துரைத்தார்.
செல்போன் வாங்கியதற்கான ரசீது முதல் ரிலையன்ஸ் தலைவர் அம்பானிக்கு எழுதிய கடிதம் வரை அத்தனை நகலையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
இந்த வழக்கு 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிவுக்கு வந்தது. தனது பொருளை விற்ற நிறுவனம் முறையாக பழுதுபார்க்காமல் நுகர்வோரை அலைக்கழித்ததாகக் கூறி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் செல்போனுக்கான ரூ.21 ஆயிரத்தையும் மனுதாரருக்கு திருப்பிக் கொடுக்குமாறு நுகர்வோர் நீதிமன்றம் ஆணையிட்டது.
இந்த தீர்ப்பும், செவிடன் காதில் சங்கு ஊதிய கதையானது. நீதிமன்றத்தின் தீர்ப்பை ரிலையன்ஸ் உட்பட யாரும் கண்டுகொள்ளவே இல்லை.
பதினெட்டு மாதங்கள் பொறுத்திருந்த ஸுல்ஃபிகர் கடந்த ஜூலை மாதம் மீண்டும் நீதிமன்றத்தில் முறையிட்டனர்.
நீதிமன்ற ஆணை நிறைவேற்று மனு ஒன்றை நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியை கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரினர்.
இதைத்தொடர்ந்து கடந்த வாரம் வெள்ளிக் கிழமை அன்று மும்பை போலீசாருக்கு நீதிமன்ற ஆணை சென்று சேர்ந்ததை அடுத்து, இதுபற்றி முகேஷ் அம்பானியின் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக சென்னையில் உள்ள ரிலையன்ஸ் அதிகாரிகள் ஸூல்ஃப்கரை தேடி வந்து ரூ.71 ஆயிரத்துக்கான 'டிடி'யை கையில் திணித்து விட்டு, மனுவை வாபஸ் பெறுமாறு கேட்டுள்ளனர்.
கடந்த 7 ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு இப்போது வருகிறார்கள். கீழ் மட்டத்தில் உள்ள இந்த பணியாளர்கள் செய்த தவறுக்கு அம்பானி என்ன செய்வார் பாவம். அதனால் தான் டிடியை வாங்கிக்கொண்டு வழக்கை வாபஸ் பெற்றுவிட்டோம் என ஸூல்ஃபிகர் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications