ஹைதராபாத்தில் ஒருவார கால ஊரடங்கு தளர்த்தப்பட்டது!
ஹைதராபாத்: பழைய ஹைதராபாத் நகரில் கடந்த ஒரு வாரகாலமாக அமல் படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்று தளர்த்தப்பட்டது.
பழைய ஹைதராபாத் பகுதியில் கடந்த சனிக்கிழமை மாலை இரு பிரிவினருக்கு இடையே கலவரம் மூண்டது.
இது நகரின் பல பகுதிகளுக்கும் பரவியதால் அன்று மாலை முதல் நகரின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
தொடர்ந்து ஐந்து நாட்களாக ஊரடங்கு உத்தரவு நீடித்ததால் மக்கள் வெளியில் நடமாட முடியவில்லை. இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் காலை 2 மணி நேரம் மட்டுமே ஊரடங்கு தளர்த்தப்பட்டது. ஒரு கிலோ அரிசி 100 ரூபாய்க்கு விற்றதால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.
நேற்று வெள்ளிக் கிழமை தொழுகைக்கு செல்லவும் பல முஸ்லிம் மக்களால் இயலவில்லை. பழைய ஹைதராபாத்தில் ஊரடங்கு காரணமாக உடனடி மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் ஒருவர் பலியானார்.
எனவே நேற்று மாலை காவல்துறை உயர் அதிகாரிகள் கூடி ஊரடங்கு நிலையை தளர்த்துவது குறித்து ஆலோசித்தார்கள்.
இதையடுத்து இன்று சனிக்கிழமை காலை எட்டு மணி முதல் பகல் 1 மணி வரை குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் ஊரடங்கை தளர்த்துவது என முடிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து தற்போது பழைய ஹைதராபாத்தில் 17 காவல்துறை எல்லைக்கு உட்பட்ட இடங்களில் மட்டும் ஊரடங்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது.
பல இடங்களில் சட்டம் ஒழுங்கு நிலைமை சுமூகமாக மாறி வருவதால் நாளை மேலும் கூடுதலான பகுதிகளில் ஊரடங்கை தளர்த்த முடிவு செய்துள்ளதாக போலீஸ் கமிஷ்னர் ஏ.கே.கான் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications