கலாம் வெளிநாடு செல்லக் கட்டுப்பாடா? - பிரதமர் அலுவலகம் மறுப்பு!

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமுக்கு உள்நாடு மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் இருந்தும், ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருமாறு அழைப்புகள் வருவது வழக்கம்.
விஞ்ஞானம், ஆராய்ச்சி, கல்வி, தொழில்நுட்பம், சமூக சிந்தனை என பல மட்டங்களிலும் அவர் ஆர்வம் காட்டி வருவதால், குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து விலகிய பின்னர் ஏராளமான நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டு வருகிறார்.
கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் அவர் 25க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இவ்வாறு அவர் மேற்கொள்ளும் அதீத பயணங்களுக்கு இந்திய அரசு தான் செலவழிப்பதாகக் கூறி ஆங்கில பத்திரிகை ஒன்று சமீபத்தில் செய்தி வெளியிட்டது.
மேலும் இதுபோன்ற பயணச் செலவுகளை குறைக்க மத்திய அரசு புதிதாக சில கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டிருப்பதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு பதில் அளிக்கும் வகையில், பிரதமர் அலுவலகம் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், 'முன்னாள் குடியரசுத் தலைவர்களின் வெளிநாட்டு பயணம் தொடர்பாக எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்க எண்ணமில்லை. இதுபோன்ற திட்டங்கள் எதுவும் மத்திய அரசிடம் இல்லை.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமைப் பொறுத்தவரை, அவரின் விமானப் பயணச் செலவு, தங்குமிடம், உணவு போன்றவற்றுக்கான செலவினங்களை அந்தந்த நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் தான் செய்து வருகிறார்கள்.
அதோடு, எந்த நாட்டின் அழைப்பை ஏற்று அவர் செல்கிறாரோ அந்த நாட்டு அரசே கூட அதற்கான செலவுகளை ஏற்றுக் கொள்கிறது. இதில் மத்திய அரசின் பங்கு ஒன்றுமில்லை' எனக் கூறப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications