சோமாலியா கடல் கொள்ளையர்களிடம் சிக்கிய 100 இந்தியர்களில் 15 பேர் விடுவிப்பு!
டெல்லி: சோமாலியா கடல் கொள்ளையர்களிடம் சிக்கியிருந்த எட்டு இந்திய சிறிய ரக கப்பல்களில் ஒன்று மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட சுமார் 100 இந்தியர்களில் 15 பேர் மட்டும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சோமாலியா கடலோரத்தில் ஏடென் வளைகுடா பகுதியில் கடந்த 28ம் தேதி எட்டு இந்திய கப்பல்கள் கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்டன.
இவற்றில் மொத்தம் சுமார் 100 இந்தியர்கள் இருந்தனர். கப்பல்களையும், அதில் உள்ளவர்களையும் பத்திரமாக மீட்பது குறித்து இந்திய அரசு தரப்பில் சோமாலிய அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், 15 பேருடன் கொண்ட ஒரு கப்பலை மட்டும் கடல் கொள்ளையர்கள் விடுவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
அகமதாபாத்தில் உள்ள கட்ச் வாஹன்வதி சங்கத்தின் தலைவர் கசம் அலி இத்தகவலை இன்று தெரிவித்தார். சோமாலி கடல் கொள்ளையரால் விடுவிக்கப்பட்ட 15 பேரும் கப்பலில் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.
கடல் கொள்ளையரிடம் சிக்கியவர்கள் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். சரக்கு ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்டவர்கள் என தெரிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications