இலங்கை தப்பிச் செல்ல முயன்ற 6 அகதிகள் கைது
ராமேஸ்வரம்: முகாம் அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் இலங்கைக்குச் செல்ல முயன்ற 6 அகதிகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தனுஷ்கோடி அருகே 4வது மணல் தீடை பகுதியில் இவர்கள் மீட்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டனர்.
இந்த ஆறு பேரும் கரூர், ஈரோடு, திருச்சி, பவானிசாகர் ஆகிய இடங்களில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்தனர். இலங்கைக்குத் திரும்பிச் செல்வதற்காக இவர்கள் ஒரு ஏஜென்டை அணுகினர். அவர்கள் இவர்களிடம் ரூ. 12,000 வாங்கிக் கொண்டு படகில் அழைத்துச் செல்வதாக உறுதியளித்தனர்.
இதையடுத்து ஆறு பேரும் முகாம்களை விட்டு வெளியேறி ராமேஸ்வரத்திற்கு வந்தனர். மார்ச் 31ம் தேதி இவர்கள் ஆறு பேரையும் படகோட்டி அழைத்துச் சென்று தனுஷ்கோடி அருகே உள்ள நான்காம் தீடை மணல் பகுதிக்கு அழைத்து வந்து இதுதான் தலைமன்னார். இங்கிருந்து யாழ்ப்பாணம் போய் விடலாம் என்று கூறி விட்டு விட்டுச் சென்று விட்டார்.
தலைமன்னார் என்று நம்பி இறங்கிய அந்த ஆறு பேருக்கும் பிறகுதான் அது மணல் தீடை என்பது தெரிய வந்தது. அந்தப் பகுதி வழியாக எந்தப் படகும், கப்பலும் வராததால், அவர்கள் தவித்தபடி இருந்தனர். இந்த நிலையில் அப்பகுதியில் ரோந்து சென்ற கடலோரக் காவல் படை படகில் இருந்த வீரர்கள் இவர்களைப் பார்த்து மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர்.
முகாம் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்காமல் போனதால் இவர்களைப் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications