எந்த சக்தியாலும் அதிமுகவை அழிக்க முடியாது – எஸ்.எஸ்.சந்திரன்

செங்கோட்டையில் கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி அன்று அதிமுகவின் சார்பில் வாகை மரத்தடி முன்பு பொது கூட்டம் நடைபெற்றது.
இந்த பொது கூட்டத்தில் கலந்து கொண்டு நடிகர் எஸ்எஸ் சந்திரன் பேசினார். அப்போது தமிழக முதல்வர் கருணாநிதியை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திமுக மாநில பேச்சாளர் கு.சாட்டையடி சக்திவேல் செங்கோட்டை போலீசில் மறுநாள் புகார் செய்தார். புகாரை தொடர்ந்து அதே ஆண்டு நவம்பர் 16ம் தேதி அன்று செங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் வழக்கு பதிவு செய்தார்.
இந்த வழக்கு நேற்று செங்கோட்டை நீதிமன்றத்தில் நீதிபதி சம்பத்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
நீதிபதி முன்பு நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் ஆஜாரானார். இவ்வழக்கின் விசாரணையை ஜூலை மாதம் 5ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
முன்னதாக அவரை நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் பி.செந்தூர் பாண்டியன், மாவட்ட துணை செயலாளர் மூர்த்தி, பொருளாளர் சண்முக சுந்தரம், வழக்கறிஞர் மாடசாமி பாண்டியன் ஆத பாலசுப்பிரமணியன், கார்த்திகேயன், முத்துகுமார், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் மாரியப்பன், நடராஜன், முருகையா, அச்சன்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் அயூப்கான் உள்பட ஏராளமான அதிமுகவினர் வரவேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் எஸ்.எஸ்.சந்திரன் பேசுகையில், எந்த சக்தியாலும் அதிமுகவை அழிக்க முடியாது. நிச்சயமாக தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி மலரும் என்றார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications