ராகிங் கொடுமையால் பிஇ மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை
சென்னை: சென்னை அருகே ராகிங் கொடுமையைத் தாங்க முடியாமல் பொறியியல் மாணவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
அஸ்ஸாமைச் சேர்ந்தவர் சின்மை ஜேபுராய். சென்னை அருகே கேளம்பாக்கத்தில் அறை எடுத்துத் தங்கி, செம்மஞ்சேரியில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார்.
இந்த நிலையில் தனது அறையில், மின்விசிறியில், சின்மை தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
விரைந்து வந்த போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சில நாட்களுக்கு முன்பு தனது தாயாருக்குப் போன் செய்த சின்மை, ராகிங் கொடுமைக்கு தான் ஆளாவதாக கூறியுள்ளார். இங்கு இருக்க முடியவில்லை என்றும் வருத்தப்பட்டுக் கூறியுள்ளார். இதையடுத்து விரைவில் வந்து கூட்டிச் சென்று விடுவதாக சின்மையின் பெற்றோர் கூறியிருந்தனர். ஆனால் அதற்குள் சின்மை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ராகிங் கொடுமையால்தான் அவர் இறந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications