பள்ளிகளில் முட்டை போடுவது எதற்காக? திருச்சி சிவா விளக்கம்
சங்கரன்கோவில்: பள்ளிகளில் வாரம் மூன்று முட்டை வழங்கப்படுகிறது. இது குழந்தைகளின் நலனுக்காக வழங்கப்படுகிறதே தவிர ஓட்டுக்காக வழங்கப்படவில்லை என்று திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா பேசினார்.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் சங்கரன்கோவில் சுவாமி சன்னதியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திமுக கொள்கை பரப்புச்செயலாளரும், எம்.பி.யுமான திருச்சி சிவா பேசுகையில்,
'கலைஞர் கருணாநிதி ஆளும் தமிழக அரசு என்றால் அரசு ஊழியர்களுக்கு கை நிறைய சம்பளம் கிடைக்கும். ஊழியர்கள் போராட்டம் நடத்தாமலும், ஆர்பாட்டத்திலும் ஈடுபடாமலும் கை நிறைய காசு அவர்களுக்கு வீடு தேடி வருகிறது.
நாட்டில் அரசியல் சூழ்நிலைகள், பொருளாதர சி்க்கல் ஏற்படும் நேரங்களில் பிரதமர் மற்றும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோருக்கு சுமூக தீர்வு ஏற்பட வழி சொல்பவராக முதல்வர் கருணாநிதி விளங்கி வருகிறார்.
பள்ளிகளில் வாரம் மூன்று முட்டை வழங்கப்படுகிறது. குழந்தைகளின் நலனுக்காக வழங்கப்படுகிறதே தவிர ஓட்டுக்காக வழங்கப்படவில்லை.
நாங்கள் கூட்டம் போட்டால் கட்சியின் கொள்கைகளையும், சாதனைகளையும் விளக்கி பேசுவோம். யாருக்கும் சாபம் வீட்டு பேசுவதில்லை' என்றார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications