'ஸ்வைன்' எச்சரிக்கை கொஞ்சம் 'ஓவர்' தான்: உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல்

கடந்த ஆண்டில் பன்றிக் காய்ச்சல் நோய் குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அபாய எச்சரிக்கைகளில் மருந்து நிறுவனங்களின் வியாபார உள்நோக்கம் பொதிந்திருப்பதாக பல்வேறு நாடுகள் குற்றம் சாட்டின.
பன்றிக்காய்ச்சல் தடுப்பு மருந்து தயாரிக்கும் சில பிரபல மருந்து நிறுவனங்களில் ஆலோசகர்களாக உள்ள விஞ்ஞானிகள் உலக சுகாதார நிறுவனத்தின் முக்கிய சில பொறுப்புகளில் இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.
ஸ்வைன் ஃபுளூ குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அபாய எச்சரிக்கையால், உலகம் முழுவதும் பல நாட்டு அரசாங்கங்கள் இந்த மருந்துகளை கொள்முதல் செய்தன.
இதன்மூலம் குறிப்பிட்ட மருந்து நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடைந்தன என்றும், பணம் சம்பாதிப்பதற்காகவே சிலர் திட்டமிட்டு உலக சுகாதார நிறுவனம் மூலம் பன்றிக்காய்ச்சலை பூதாகரமாக்கி காட்டியுள்ளார்கள் என்றும் புகார்கள் கூறப்பட்டன.
இந்நிலையில், டெல்லியில் உலக சுகாதார நிறுவனத்தின் தென் கிழக்கு ஆசிய மண்டல இயக்குனர் சாம்லீ பிலன்பாங்செங் இன்று டெல்லியில் நிருபர்களை சந்தித்தார்.
அப்போது இதுபற்றி அவரிடம் கேட்டபோது, 'ஆம். உண்மை தான். பன்றிக் காய்ச்சலால் நாம் பயந்த அளவுக்கு விபரீதம் ஏற்பட்டுவிடவில்லை' என்றார்.
ஆனால் மருந்து கம்பெனிகளுக்கு சாதகமாகத் தான் இந்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதா என்பது குறித்து அவர் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.
உலக சுகாதார நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் இதுபற்றி விளக்கமாக கூறுவார் என நழுவிவிட்டார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications