இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடும் நிலநடுக்கம்
ஜகார்தா: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டது.
புதன்கிழமை காலையில் இந்த பூகம்பம் ஏற்பட்டது. இதன் அளவு 7.7 ரிக்டராக கணக்கிடப்பட்டுள்ளது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இருப்பினும் பின்னர் இது திரும்ப்ப் பெறப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தின் காரணமாக பெரிய அளவில் சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
உள்ளூர் நேரப்படி காலை 5.15 மணிக்கு இந்த பூகம்பம் ஏற்பட்டது. இதையடுத்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர். பூகம்பத்தின் மையம் சுமத்ராவின் சிபோல்கா பகுதியிலிருந்து 205 கிலோமீட்டர் தொலைவில் கடலில் இருந்த்து. கடலுக்கு அடியில் 46 கிலோமீட்டர் ஆழத்தில் பூகம்பம் நிகழ்ந்த்தாக அமெரிக்க புவியியல் ஆய்வுக் கழகம் தெரிவித்துள்ளது. முதலில் பூகம்பத்தின் அளவு 7.8 ரிக்டராக கணக்கிடப்பட்டது. பின்னர் இது 7.7 ரிக்டர் என தெரிவிக்கப்பட்டது.
பூகம்பத்தைத் தொடர்ந்து பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கையைப் பிறப்பித்தது. இருப்பினும் 2 மணி நேரம் கழித்து அது திரும்பப் பெறப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications