சட்டிஸ்கர் நக்சல் தாக்குதல்: பலியான வீரர்களில் 3 பேர் தமிழர்கள்
சென்னை: நக்சலைட்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்ட 76 சிஆர்பிஎப் போலீசாரில் 3 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
சட்டீஸ்கரில் மாவோயிஸ்டு நக்சலைட்டுகள் தாக்கியதில் 76 மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டனர்.
சென்னையை சேர்ந்த மோகனரங்கன், குமரி மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமார், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சேகர் ஆகிய மூவரும் பலியானவர்களில் அடக்கம்.
மோகனரங்கன் (44). சென்னை கொளத்தூரை சேர்ந்தவர். கொளத்தூர் பூம்புகார்நகரில் இவரது குடும்பம் வசித்து வருகிறது. இவரது மனைவி பெயர் சுஜாதா. அனுஷா என்ற மகள் இருக்கிறாள். அனுஷா 9வது வகுப்பு படிக்கிறார்.
மோகனரங்கன் இறந்த தகவல் நேற்று மாலை அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே அனைவரும் கதறி அழுதார்கள்.
அடுத்து குமரி மாவட்டம் புதுக்கடையைச் சேர்ந்த விஜயகுமாரின் (36) குடும்பம் அனந்தமங்கலத்தில் உள்ளது. விஜயகுமாருக்கு ராதா (33) என்ற மனைவியும், சவுமியா (9) என்ற மகளும் உள்ளனர்.
பலியான இன்னொரு போலீஸ்காரர் சேகர் (36) வேலூர் மாவட்டம் கந்திலி அடுத்த தோக்கியம் கிராமத்தை சேர்ந்தவர். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
மூன்று போலீஸ்காரர்களின் உடலும் விமானம் மூலம் இன்று பகல் 1.30 மணியளவில் சென்னை கொண்டு வரப்படுகிறது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து மோகனரங்கன் உடல் கொளத்தூரில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்து செல்லப்படுகிறது.
-
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!












Click it and Unblock the Notifications