துபாய் ஈடிஏ மெல்கோ நிறுவன இந்திய கிளை அதிகாரிகள் சந்திப்பு
இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும இயக்குநர் ஹமீது சலாஹுதீன் அவர்கள் தனது உரையில் வரும் ஆண்டுகளில் இந்திய சந்தை நமது முக்கிய இலக்காகும் என்றார். இதனைச் சந்திக்கும் வகையில் நமது கவனத்தை அதிக அளவில் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திப் பேசினார்.
முழு உலகமும் இந்தியாவின் மீது தங்களது கவனத்தை செலுத்தி வரும் இவ்வேளையில் ஈடிஏ மெல்கோ மட்டும் இதற்கு விதிவிலக்கல்ல என தனது துவக்கவுரையில் ஈடிஏ மெல்கோ எக்ஸிகியூடிவ் இயக்குநர் அஹமது மீரான் தெரிவித்தார். இந்திய கிளை உயரதிகாரிகளுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் உரை நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து இந்திய கிளை நிறுவனத்தின் உயரதிகாரிகள் தாங்கள் இதுவரை சாதித்தவற்றை பட்டியலிட்டனர். மேலும் அதனைத் தொடர்ந்து எதிர்கால செயல் திட்டங்கள் குறித்தும் விவரித்தனர்.
வாடிக்கையாளர் சேவையின் முக்கியத்துவம் குறித்து சீனியர் எக்ஸிகியூடிவ் டைரக்டர் எம்.ஏ. சையீத் விவரித்தார்.
ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும இயக்குநர் ஹமீது சலாஹுத்தீன், எக்ஸிகியூடிவ் டைரக்டடர் அஹமது மீரான் ஆகியோர் இந்திய கிளை நிறுவனத்தின் வளர்ச்சிக்கு வேண்டிய அத்தனை உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார்.
நான்கு நாட்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒரு புதிய உதவேகத்தை அளித்த மனநிறைவை அளித்ததாக இந்நிகழ்வில் பங்கேற்ற அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிறுவனம் ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், கத்தார், குவைத், இந்தியா உள்ளிட்ட 21 நாடுகளில் தனது சேவையினை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
--













Click it and Unblock the Notifications