தூத்துக்குடி: விசைப்படகில் மீன் பிடிக்க 45 நாட்களுக்கு தடை
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 15ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை 45 நாட்களுக்கு விசைப் படகில் சென்று மீன்பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
ஓவ்வொரு ஆண்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு விசைப்படகி்ல் சென்று ஆழ்கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம்.
இத்தடை விதிக்கப்பட்ட 45 நாட்களிலும் விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டிருக்கும்.
இந்த ஆண்டும் மீன்களின் இனப்பெருக்கத்திற்காகவும், மீன் வளத்தை கூட்டுவதற்காகவும் இத்தடை விதிக்கப்படுகிறது.
வரும் 15ம் தேதி முதல் இந்த மீன்பிடி காலம் அமல்படுத்தப்படுகிறது. அடுத்த மாதம் 29ம் தேதி வரை இத்தடை நீடிக்கும்.
இதனால் விசைப்படகுகள் தூத்துக்குடி கடல் பகுதிக்கு சென்று மீன்பிடிக்க முடியாது. ஆனால் நாட்டு படகுகள் மற்றும் கட்டுமரங்களுக்கு இந்த தடை பொருந்தாது என மீன் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மீன்பிடி தடை காலங்களில் விசைப்படகு மீனவர்களுக்கு தொழில் இழப்பு ஏற்படுவதால் அரசு நிவாரணமாக ரூ.500 வழங்குகிறது.
ஆனால் இந்த நிவாரண தொகையை 45 நாட்களுக்கு ரூ.4500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications