தமிழகத்தில் மாவோயிஸ்ட் நகச்லைட்கள் ஊடுறுவுவார்கள்: வைகோ எச்சரிக்கை

மதுரையில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசியதாவது:
தமிழகத்தில் நடைபெறும் சில சம்பவங்கள் பெரும் கவலை அளிக்கிறது. திருமங்கலம், தேவகோட்டையில் பாலியல் கொடுமைக்கு ஆளாகி சிறுமிகள் இறந்தது மனதை பதைபதைக்க வைக்கிறது.
மனிதநேயம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றது. பெற்றோர், தங்கள் பிள்ளைகளை தனியே விடாமல் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
மதுரை மண்டலத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது. காரணம் பெரியாறு அணையை எந்த நேரத்திலும் கேரள அரசு இடிக்க தயராக உள்ளது.
இது நடக்கக் கூடாது என எச்சரிக்கவே, மே 28ம் தேதி கேரளா செல்லும் 12 சாலைகளிலும் மறியல் நடத்தப்படுகிறது.
இதுகுறித்த விளக்க கூட்டம், மதுரையில் மே 3ம் தேதி நடக்கிறது. அதில், தமிழ் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் உள்பட ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இது தமிழக அரசை எதிர்க்கும் போராட்டம் அல்ல. மத்திய, கேரள அரசை எதிர்க்கும் போராட்டம்.
பெரியாறு அணை பிரச்னையில், உச்சநீதிமன்றத்தில் நமக்கு நியாயம் கிடைக்காது. மத்திய அரசிடமும் எதிர்பார்க்க முடியாது.
இந்தியாவில் ஆந்திரா, சட்டீஸ்கர், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் உள்ள 150 மாவட்டங்கள் மாவோயிஸ்டுகள் பிடியில் உள்ளன.
சபலம், விரக்தி அடைந்துள்ள இளைஞர்களால், தமிழக எல்லையில் உள்ள இந்த ஆபத்து உள்ளே வராது என்பது என்ன நிச்சயம்?
இன்றைய நிலையில், தேர்தலில் பணம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால், தமிழக எல்லையில் இருக்கும் மாவோயிஸ்டுகள், ஊடுருவும் அபாயம் உள்ளது. அந்த நிலைமை தமிழகத்திற்கு வரக்கூடாது.
ஜனநாயகத்தை நிலைநாட்டவும், தமிழகத்தின் எதிர்காலத்தை ஒளிமயமாக்குவதிலும் மக்கள் ஈடுபடவேண்டும் என்று வைகோ பேசினார்.
-
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications